நீச்சல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய மிகச்சிறந்த உடல் நலத்திற்கான பயிற்சியாகும். அனைத்து வயதினருக்கும், திறன் மற்றும் உடற்பயிற்சி நிலைகளுக்கும் ஏற்ற விளையாட்டு இது. நீச்சல் என்பது நீரின் எதிர்ப்புக்கு எதிராக, நம் முழு உடலையும் நகர்த்த வேண்டிய பயிற்சியாகும்.
நீச்சல் குளங்கள், கடற்கரைகள், ஏரிகள், அணைகள் மற்றும் ஆறுகளில் நீந்தலாம். இருப்பினும், நீந்தத் தேர்ந்தெடுக்கும் சூழல் பாதுகாப்பானதுதானா? என்பதை முதலில் உறுதிப்படுத்தி, அதன் பிறகு நீச்சல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
நீச்சல் என்பது பொதுவாக, உடல் நலன் மற்றும் மன நலன்களை மேம்படுத்துகிறது.
* நீச்சல் அனைத்து உடல் நலனுக்கும் ஏற்றதொரு சிறந்த பயிற்சியாகும்.
* நீச்சல் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் இருந்து சில தாக்க அழுத்தத்தை நீக்குகிறது.
* சகிப்புத்தன்மை, தசை வலிமை மற்றும் இதயத்திற்கான உடற்பயிற்சி ஆகியவற்றை வழங்குகிறது
* ஆரோக்கியமான எடை, ஆரோக்கியமான இதயம் மற்றும் நுரையீரலைப் பராமரிக்க உதவுகிறது
* தசைகளை உறுதியாக்கி, வலிமையை உருவாக்குகிறது
* நீச்சலின் போது தசைகள் அனைத்தும் பயன்படுத்தப்படுவதால், உடல் முழுவதும் வலிமையை வழங்குகிறது.
* நீச்சல் நம் உடல் நலனுக்கு உதவக்கூடிய, ஒரு எளிமையான பயிற்சியாக இருக்கிறது.
* நீச்சல் ஒரு நிதானமான மற்றும் அமைதியான உடற்பயிற்சி வடிவமாக இருக்கிறது
* மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
* ஒருங்கிணைப்பு, சமநிலை மற்றும் தோரணையை மேம்படுத்துகிறது.
* நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
* சில காயங்கள் மற்றும் நிலைமைகளுக்கு நல்ல குறைந்த தாக்க சிகிச்சையை வழங்குகிறது.
* வெப்பமான நாளில் குளிர்ச்சியடைய ஒரு இனிமையான வழியை வழங்குகிறது.