வான வில்லைப் பாரம்மா! – அதில்
வர்ண ஜாலம் ஏதம்மா?
வான மீதில் பாலமாய் அதை
வைத்துச் சென்றது யாரம்மா?
இந்தி ரன்கை வில்லாமோ? – இது
ஈச னாரின் வில்லாமோ?
அந்த நாளில் இராமனின் தோள்
அமர்ந் திருந்ததிவ் வில்லாமோ?
வருண தேவனின் வில்லாமோ? – அவன்
வளைக்கும் மேக வில்லாமோ?
அருள் நமக்கே அம்பு மழையை
அளிக்க வந்த வில்லாமோ?
வான வில்லைப் பாரம்மா! – அதில்
வர்ண ஜாலம் ஏதம்மா?
- நா.சீ. வரதராஜன்