What is a loan?
What is a loan? 
கோகுலம் / Gokulam

கடன் என்கிறார்களே அது என்ன?

கல்கி டெஸ்க்

நீங்கள் ஒரு பேனா வாங்க ஆசைப்படுகிறீர்கள். அதற்கு இருபது ரூபாய் தேவை. ஆனால், உங்களிடம் இப்போது இருபது ரூபாய் இல்லை. ஆகவே, உங்கள் தோழியிடம் இருபது ரூபாய் வாங்கிக்கொள்கிறீர்கள். அன்று மாலை அம்மாவிடம் பணம் வாங்கி, மறுநாள் அவளுக்குத் திரும்பக் கொடுத்துவிடுகிறீர்கள்.

கடன் என்பது நம்மிடம் இல்லாத பணத்தை இன்னொருவரிடமிருந்து தற்காலிகமாக வாங்கிக் கொள்வது, அதன் மூலம் நம் அப்போதைய தேவையை நிறை வேற்றிக்கொள்வது. பின்னர் நம்மிடம் பணம் உள்ள போது வாங்கிய பணத்தைத் திரும்பத் தந்துவிடுவது.

இப்படி யார் நமக்குப் பணம் தருவார்கள்?

ம்மை நன்றாகத் தெரிந்தவர்கள்தான் பணம் தருவார்கள். தெருவில் யாரிடமாவது போய்க் கேட்டால் பணம் கிடைக்காது. காரணம், பணம் தருகிற ஒருவருக்கு அந்தப் பணம் தனக்குத் திரும்ப வரும் என்கிற நம்பிக்கை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடன் கிடைக்காது!

எப்போதும் பணத்தைதான் கடன் வாங்கவேண்டும் என்றல்ல. சிலர் பொருட்களையும் கடன் வாங்குவார்கள். இப்படித் தனி நபர்களிடம் பணமோ பொருளோ கடன் வாங்கலாம். வங்கிகளின் முக்கியமான பணிகளில் ஒன்று கடன் வழங்குவது. வங்கிகளிடம் பணத்தை மட்டும்தான் கடன் வாங்க இயலும்.

வங்கிகள் யாருக்கு வேண்டுமானாலும் கடன் தருமா?

தற்கென்று சில நிபந்தனைகள் உண்டு. அவையெல்லாம் பூர்த்தியானால்தான் கடன் தருவார்கள். உதாரணமாக, ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்குகிற ஒருவருடைய மாதச் சம்பளம் இத்தனை ரூபாய் இருக்கவேண்டும் என்பது போல் ஒரு வங்கி தீர்மானிக்கும். அதை உறுதிசெய்து கொண்டுதான் அவர்களுக்குக் கடன் தரும்!

கடன் வாங்குவது சரியா? தவறா?

ம்மிடம் இருக்கிற பணத்தை வைத்துக் கொண்டுதான் வாழ வேண்டும், அதுதான் சிறந்தது என்று சொல்வார்கள். அதே சமயம், கடனில் சில நன்மைகளும் உள்ளன. உதாரணமாக, வீடு கட்ட விரும்பும் ஒருவர் அதற்குத் தேவையான பணத்தைச் சேமிக்கப் பல வருடங்கள் ஆகும். அதுவரை அவர் வாடகை வீட்டில் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் வங்கியில் கடன் பெற்று உடனே வீட்டைக் கட்டிவிடலாம். அதில் தங்கிக் கொண்டு மாதம் ஒரு சிறு தொகையாக அந்தப் பணத்தைத் திரும்பத் தரலாம். இதேபோல், கல்விக் கடனும் உண்டு. அதாவது, உயர்படிப்புக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் அதற்குத் தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். பிறகு,  படித்து முடித்து வேலைக்குச் சென்று சம்பாதித்து, அந்தக் கடனை அடைத்து விடலாம். இப்படிக் கடனில் நல்லனவும் உண்டு!

கடன் என்பது, நமக்கு ஒருவர் செய்யும் உதவி. அதைப் பெற்றுக்கொள்ள ஒரு தகுதி வேண்டும். என்ன தகுதி தெரியுமா? அதைத் திருப்பித் தருகிற தகுதிதான். அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கடன் தருவதால் வங்கிக்கு என்ன லாபம்?

டன் வாங்கியவரால் குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால், நாளுக்கு நாள் வட்டி ஏறும்! அதோடு ஓர் அபராதத் தொகையையும் சேர்த்துக் கட்ட வேண்டும். இதெல்லாம் வங்கிகளுக்கு வருமானம்தானே!

பப்பாளி இலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 

முத்து முத்தாக வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் அதிசயம்!

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT