police officer with his bride 
கல்கி

சிறுகதை: எதிர்பாராததை எதிர்பாருங்க!

மாதவி

எதிர்பாராததை  எதிர்பாருங்க“ சினிமா ஷூட்டிங்...

அந்த கின்னம் கிராமம் அதிகாலையிலேயே சந்தோஷ மிகுதியால் அஜீரணப்பட்டது. 

இளசுகளின் ஆரவாரமும், நடுத்தரங்ளின் போலி வெறுப்பும், வயதானவர்களின் ‘சரிதான் போ’வும் தெருவெங்கும்...

கூடுதல் ஸ்பெஷல் ஸ்வீட்டாய் பிரபல நடிகை இன்பா 

கடந்த ஆறேழு வருடங்களாய் மார்க்கெட்டின் உச்சியில்...

வயதே தெரியாத வரம் பெற்றவள்.

டைரக்டர் மாயன் சீக்கிரமாகவே ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார்

மலைச்சரிவில் சூரியோதயத்தில் டூயட். ஷூட்!

நடிகர் மாறனும் இன்பாவும் வெரி க்ளோஸாய் நடிக்க, 'இவ்வளவு ரொமான்ஸ் நானே எதிர்பார்க்கலை...' டைரக்டர் மாயன் சபாஷ் போட்டார்.

'எதிர்பாராததை எதிர்பாருங்க' என்றாள் இன்பா பொடி வைத்து.

'ஷாக்கா?' மாயன் கேட்க,

ஆமோதிப்பது போல் தலைசாய்த்து மயக்கும் சிரிப்பை உதிர்த்தாள்.

'ப்ளீஸ் சொல்லேன்' கிட்டே வந்து காதை காட்ட, செல்லமாய் தள்ளிவிட்டாள்

'அவ்வளவு தானா?' ஏமாற்றமாய் மாயன் நகர,

'ப்ரஸ்ஸூக்கே சொல்லலை. வெய்ட் பண்றாங்க...' நமுட்டுச்சிரிப்பை மலர விட்டாள். 

'இன்னொரு லைன் திருப்பி எடுக்கலாமா?' மாயன் பயந்தபடி கேட்க,

'வித் ப்ளஷர்' என்று மாறனும் இன்பாவும் மறுபடி ரொமான்ஸ் போட,

டைரக்டர் மாயன் வெற்றிக்களிப்பில், 'ஐ கெஸ்ட் ஸ்வீட்டி... விஷ் யு….' வாயை அவசரமாய் பொத்தினாள் இன்பா.

'என்ன ப்ளான்? சொல்லு...' 

'அடுத்த சீன் என்ன?' 

'லஞ்ச்சுக்கப்புறம் மேரேஜ் சீன் கோவிலில்...'

'அங்கே ரியல் மேரேஜ். மாறனோட...'

'அடிப்பாவி! எத்தனை இளசுகளின் கனவுக்கோட்டையை உடைக்கப்போகிறாய் தெரியுமா?'

கர்வமாய் சிரித்தாள்.

லஞ்ச் டயத்தில் மிகவும் டென்ஷனாயிருந்தாள் இன்பா.

சாப்பாடுகூட சரியாய் சாப்பிடவில்லை.

காவலுக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அடிக்கடி ஏதோ பேச, அவர் மாறனிடம் சீரியஸ்ஸாய் பேசினார்.

மாறன் அடிக்கடி இன்பாவிடம் ரகசியமாய பேச, டென்ஷன் ஏற ஏற, இன்பா கண்களில் கண்ணீர்.

பயத்தில் கை நடுங்க, சில நிமிடத்தில் மயக்கமாய்மெல்ல சாய,
ஷூட்டிங் யூனிட்டே பதற்றமடைய

'டார்லிங் ஆர் யு ஓகே?'

'சற்று நேரம் என்னை தனியாய் விடுங்க..' இன்பா கத்தினாள்.

'ஓகே' மாயன் விலகினான்.

கேரவேனுக்குச் சென்று மாறனிடம் பேசினாள்.

பல வார்த்தைகள்... 'ஏமாத்திட்டே', 'முடியாது', 'இளிச்சவாயனா' என்பவை காதில் விழ,

எல்லோரும் யூனிட்டில் ஒன்றும் புரியாமல் திகைக்க

ஷூட்டங் அவ்வளவுதான் இன்னைக்கு என்ற குரல்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் இன்பா அழுதபடி பேசி, கேரவேனுக்கு

கூட்டிசெல்ல,

அடுத்த பத்தாவது நிமிடம் முகம் தாமரையாய் மலர்ந்தபடிவெளியே வந்தாள் இன்பா.

'டைரக்டர் ஸார் டேக் போகலாம்' என்றாள்.

மாயன் 'செல்லம் எனி ப்ராப்ளம்? மூடு அவுட்னா நாளைக்கு ஷூட் பண்ணிக்கலாம்' என்றான்.

'நோ நோ. நான் 200% சந்தோஷமாயிருக்கேன். இன்றே இப்பவே நல்ல முகூர்த்தம். நிஜத்தாலி ரெடி.' சிரித்தாள்.

மாறன் காரை எடுத்துக்கொண்டு வேகமாய் செல்ல,

'மேடம் மாறன் காரில் எங்கேயோ போறார்' பயந்து பேச,

'போகட்டும் மாறனில்லாமே எப்படி கல்யாணம்?'                               

இன்பா மெளனமாய் கண்களால் சிரிக்க 'ஓ! நிஜ முகூர்த்த மாலை வாங்கப்போறாரா?' மாயன் தானே பதில் சொல்லிக்கொள்ள,

அர்த்தமாய் சிரித்தாள் இன்பா.

கோவிலில் கல்யாண செட் போட்டு, அதில் இன்பா வர, ப்ரஸ் கேமராக்கள் மின்ன,

மாயன் டென்ஷனாய் இன்னும் மாறன் வரலை என்று இன்பா காதில் சொல்ல,

'கெட்டி மேளம், கெட்டி மேளம்! மாப்பிளை எங்கே? அவரை கூட்டி வாங்க' ஐயர் கத்த,

மாப்பிளை கோலத்தில் வந்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

டைரக்டர் மாயன் 'அட இவரா?' நெஞ்சை பிடித்துக்கொள்ள,

போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்பா கழுத்தில் தாலிகட்ட,

'ஐயோ! அப்பா! தாங்கலை. ஹீட்ச்காக் படத்தை விட பயங்கர மர்மமா இருக்கே!' சுவரில் சாய்ந்தார் மாயன்.

கேமராக்கள் மின்ன, 'காலேஜில் படிக்கும் போதே நாங்களிருவரும் லவ்வர்ஸ். அப்பவே மோதிரம் மாற்றிக்கிட்டோம். ரெண்டு குடும்பத்தையும் விதி பிரிச்சது. நாங்க ஆளுக்கொரு மூலையில் சிதறிட்டோம். 13 வருடங்கள் பாக்கலை. இன்று பார்த்தோம். கொஞ்சம் லேட்டா பார்த்திருந்தா ஜோடி மாறியிருக்கும். கடவுள் போட்டிருக்கான் இன்னார்க்கு இன்னாரென்று..' என்று கண்ணீர் மல்க பேட்டிதர,

'இது தான் என் படத்தின் நிஜ க்ளைமாக்ஸ்' என்று முடிவை மாற்றினார் டைரக்டர் மாயன்.

Jeff Bezos-ஐ கோடீஸ்வரன் ஆக்கிய விதி என்ன தெரியுமா? 

முகத்தை மூடித் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ போச்சு!

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!

மரங்களைப் பற்றி மனிதர்கள் ஏன் கவலைப்படுவதில்லை?

SCROLL FOR NEXT