Man and woman talking 
கல்கி

சிறுகதை: வைர நெஞ்சம்!

மாதவி

ஹோட்டல் ஹில் டாப்..

ஏ.ஸி.பார்

‘என்ஜாய் டில் த என்ட்’   உரக்க கேட்ட பாடலை கேட்க விடாது தன் நளின அசைவுகளால் காண்போரை கிறங்கடித்து கொண்டிருந்தாள் பாப் சிங்கர் ஸ்வப்னா. 

ஆறாவது ரவுண்ட் வோட்காவை வேண்டுதல் வேண்டாமையோடு கையில் க்ளாஸூடன் அவளை வெறித்துப்பார்த்தான் ரகு.

ஸ்வப்னா இப்பவும் உன்னை நான் லவ் பண்றேன்.

இருந்தாலும் உன்னைக்கொல்லப்போகிறேன்..

இந்த வயதில் இவ்வளவு அழகோடு நீ சாக வேண்டுமா? விதி! 

இந்த விதியை வரவழைத்தது யார்? நீ தானே! பிறகு வேறு வழி?

நீ செய்தது டபுள் க்ராஸ். அக்மார்க் நம்பிக்கை துரோகம். சாகு முன், ஏன் சாகிறாய் என்று உனக்கு தெரிய வேண்டும். துரோகத்தின் சம்பளமல்லவா!

பாடி முடிக்குமுன் அவளருகில் சென்றான். ரகுவைப் பார்த்ததும் ஒயிலாக அவனுடன் ரெண்டு ஸ்டெப்ஸ் ப்ரேக் டான்ஸை கடைசி துளியாக சிந்த... ஏகப்பட்ட கரகோஷம். 

ஸ்வப்னாவை ஓரங்கட்டினான்.

மூணாவது ப்ளோரில் ஸ்விம்மிங் பூல் அருகில் இருளின் நிழல் படர்ந்த ஏரியாவில் நிறுத்தி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

நிலை தடுமாறி கதி கலங்கி விட்டாள்

“ரகு ஊஊஊ… ஏன்?” கன்னத்தை தடவியபடி கேட்டாள்?

“எங்கே அந்த மூனு வைர கற்கள்?”

“மூனு வைர கற்களா? என்ன சொல்றே?”

“ஒன்னும் தெரியாதில்லே. இந்த நடிப்பு தான் என்னை மயக்கியது.”

“நடிப்பா? எனக்கு நிஜமாவே ஒன்னும் புரியலை...” விழிகளை அகல விரித்து பேசினாள்.

“மலேசியாவில் ஷோ முடிஞ்சவுடன் எங்கே போனே?” பற்களை கடித்தான் ரகு.

“நீ சொன்னபடி கிஷனை பார்த்தேன் “

“அப்புறம்?” குரலில் சீற்றம். 

“ஒரு ப்ளாஸ்டிக் கவரில் 20 வைரக்கற்களை வைத்து பத்திரமாக ஃப்ளைட்டில் கடத்தி உன்னிடம் தரச்சொன்னான்.”

“பொய். 23 கற்கள். மூணு கற்களை நீ அமுக்கிட்டே! என்னை ஏமாத்திட்டே!”

“ஷிட்! உன்னை நான் ஏமாத்தறதா? நீயும் நானும் வேறா டியர்?” மார்பில் சாய்ந்தாள்.

“இந்த சாகசமெல்லாம் வேணாம். மூணு கற்களை யாரிடம் வித்தே?”

“சும்மா இமேஜின் பண்ணாதே!”

"இமேஜின்? ஹ்ஹா! சாகசக்காரி! நீ நேற்று நைட் டைமன்ட் பஜாரில் காரில் உட்கார்ந்து சீக்ரெட் பிஸினஸ் பேசினது வரை தெரியும்.” ரகு வில்லத்தனமாய் சிரித்தான்!

“என்னை உளவு பாக்கறியா? என் ஃப்ரண்டை பாக்கப்போனேன்”

“நடு நிசியில் எந்த ஃப்ரண்டை பாக்கப்போனே பத்தினி?”

“ஃபெளல் லாங்வேஜ். தண்ணி மூக்கு முட்ட போட்டிருக்கே. நாளைக்கு பேசலாம். யு டிஸர்வ் எ ஸ்லீப்” அவனை கைத்தாங்கலாய் பிடித்தாள்.

“விட்றீ. ஏய் நீ க்ளப் டான்ஸர் தானே?”

“ஆமாம். அதுக்கென்ன? “

“நிமிஷத்துக்கு ஒரு லவ். இப்ப கரெண்டா யார்?”

“லிமிட் மீறி பேசறே!” குரலில் கோபம்.

“என்னடி செய்வே?”

“திஸ் இஸ் த லிமிட்” என்று அவனை தள்ளி விட்டாள்.

“உனக்கெல்லாம் கோபம்! ஆமாம் உனக்கு நீச்சல் தெரியாதில்லே!” நீச்சல் குள ஏணியில் அவளை ஏற்றியபடி கிண்டலாய் கேட்டான்.

“ஆமாம். ஏன்?”

“உண்மையை சொன்னதுக்காக நீ சாகப்போறே!" நீச்சல் குளத்தில் படாரென்று  தள்ளி விட்டான்.

“சாகுடி!” 

கீழே இறங்கிதும் ஷாக்!  

எதிரே ஈரமாய் ஸ்வப்னா

“நீச்சல் தெரியுமா?”ஆடிப்போய் கேட்டான்.

“பின்னே? டேய் உன்னிடம் கொடுத்த 20 வைரக்கற்களும் டூப்ளிகேட். மூணு மிஸ்ஸிங்னு கேட்கிறே! முட்டாள்! 23 கற்களையும் நான் டைமன்ட் பஜாரில் பணமாக்கிட்டேன். என்னடா செய்வே?” முகத்துக்கு நேரே திமிராய் கேட்டாள்.

“ஏய் உன்னை”                                      

“ஒன்னும் செய்ய முடியாது. நீ இன்னும் ரெண்டு நிமிஷத்தில் செத்துடுவே. உன் மார்பில் சாயும் போதே விஷ ஊசி உன் பின்னாடி போட்டுட்டேன்.. யாருகிட்டே கொலைவெறி காட்டறே?” என்று காலால் கிக் பாக்ஸிங் போல் மாரில் உதைக்க ரகு தடுமாறி விழுந்து இறந்தான்.

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

ஸ்கிசோஃப்ரினியா காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

SCROLL FOR NEXT