Children wathing TV 
மங்கையர் மலர்

குழந்தைகளைக் குறி வைக்கும் விளம்பரங்கள் - ஆக்கப்பூர்வமா? ஆபத்தா?

வித்யா குருராஜன்

தொலைக்காட்சிப் பெட்டி முன் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் அதில் அரை மணிக்கு மேல் விளம்பரங்களே பார்க்கக் கிடைக்கின்றன..

அந்த விளம்பரங்களைக் கவனித்தால் இந்த ஆறு விஷயங்கள் புலப்படும்.

1. பல் துலக்கும் பசை, ப்ரஷ் இவற்றுக்கான விளம்பரங்களில் பொதுவாக ஒரு குழந்தைக்குப் பல் வலி ஏற்படும், அம்மா மருத்துவரிடம் அழைத்துச் செல்வாள், மருத்துவர் சொத்தைப் பல் பிரச்சினை பற்றி எடுத்துரைப்பார், குறிப்பிட்ட brand விளம்பரப்படுத்தப்படும். சொத்தைப்பல் பற்றிய ஒரு தாயின் பயத்தை இந்த brand போக்குவது போல் காட்சிப்படுத்தப்படும். cute ஆன குழந்தைகள் "brush brush 2 times a day" என்று ஆடும் பாடும். ஆக இந்த பொருளுக்கான எல்லா விளம்பரங்களிலும் ஒரு குழந்தை, ஒரு தாய், ஒரு மருத்துவர் நிச்சயம் இருக்கிறார்கள்.

2. துணி துவைக்கும் சோப்பு கட்டி, சலவைத் தூள், இயந்திரத்தில் ஊற்றும் சலவை திரவம், fabric conditioners ஆகியவற்றின் விளம்பரங்களிலும் ஒரு குழந்தை நிச்சியம் காணப்படுகிறது. துவைப்பதென்னவோ அம்மாக்கள் தான். pour rub pour, கறை நல்லது போன்ற கவரும் வாசகங்கள் குழந்தைகளை வைத்துக் காட்சிப்படுத்தப்படுகின்றன. பணி முடித்துத் தாமதமாக வீடு திரும்பும் தாய் மீது கோபத்தில் இருக்கும் ஒரு குழந்தை, அவள் காலை அணிந்து சென்ற உடையிலிருந்து இரவிலும் குறையாமல் வீசும் நறுமணத்தினை நுகர்ந்து, கோபம் மறந்து கட்டிப்பிடிக்கும்படியாக ஒரு fabric conditioner விளம்பரம். பக்கத்து வீட்டுக் கொடியில் காயும் துணிகளோடு தன் அம்மாவின் சலவையை ஒப்பிட்டுத் தாழ்வாக உணரும் குழந்தைகளும் காண்பிக்கப்படுகின்றனர். மொத்தில் இந்த வகை விளம்பரங்களிலும் ஒரு குழந்தை, ஒரு தாய் இருக்கிறார்கள்.

3. தரை சுத்தம் செய்யும் திரவம், toilet சுத்தம் செய்யும் திரவம், கரப்பான், கொசு கொல்லும் திரவ விஷ மருந்துகள், கண்ணாடி துடைக்கப் பயன்படும் திரவம், கை கழுவும் திரவம், ஆகியவற்றின் விளம்பரங்களிலும் குழந்தைகளே தென்படுகின்றனர்.

4. அழகு சாதனப் பொருட்களான சோப்பு, பவுடர், க்ரீம்கள், தலைக்குத் தடவும் எண்ணெய், முகம் கழுவும் திரவ சோப்பு, ஷாம்பு போன்றவற்றில் குமரப் பருவத்தில் நுழையும் பெண் குழந்தைகள் காட்டப்படுகின்றனர். பரு வருதல் கூட பயங்கரமான பிரச்சினை போல சித்தகரிக்கப்படுகிறது.

5. உணவு பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் ஏராளம் ஏராளம்.. biscuit, chips, குளிர்பானங்கள், நூடுல்ஸ், எண்ணிலடங்கா சாக்லேட்டுகள், ஐஸ் க்ரீம், போன்ற junk வகை உணவுகள் தொடர்புடைய விளம்பரங்கள் அனைத்திலும் குழந்தைகள் இருக்கிறார்கள். இதை விட, energy drinks, சத்து பான விளம்பரங்களில் 90% குழந்தைகளுக்கானதே. கருவிலிருக்கும் குழந்தைகளைக் கூட காட்டத் தவறுவதில்லை. பிறந்த குழந்தைக்குத் தான் எத்தனை பொருட்கள் எத்தனை விளம்பரங்கள்.. ஒரு மருத்துவரும் கூடவே வருகிறார்.

6. ஜவுளிக் கடை, நகைக் கடை விளம்பரத்திலும் குழந்தைகள் இல்லாமல் இல்லை.

இவை அனைத்தையும் கவனித்துப் பார்த்தால் ஒரு ஒற்றுமை புலப்படுகிறது. குழந்தையோடு நேரடி தொடர்புடைய பொருளாயினும் சரி, அப்படி அல்லாத பொருளாயினும் சரி, குழந்தைகளையே குறி வைக்கின்றது வியாபார சந்தை.

இதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.

1. குழந்தைகள் கற்பனைக் காட்சிகளை எளிதில் நம்புவார்கள். அதனால் கவரப்படுவார்கள். சிறு குழந்தை கூட காட்சிகளில் பார்த்த brand பெயர்களைக் கடைகளில் பார்த்தால் எளிதில் அடையாளம் கண்டு அதை அடைய அடம் பிடிக்கும். visuals குழந்தைகளைப் பெரிய அளவில் பாதிக்க வல்லது.

2. குடும்பங்களில் குழந்தைகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. குழந்தையும் ஒரு முடிவெடுக்கும் நபராக மாறியிருக்கிறது. அப்பாவோ அம்மாவோ பெட்டிக் கடைகளுக்குச் சென்று மாத மளிகை வாங்கி வந்த நிலை மாறி குழந்தைகளோடு super market சென்று வாங்கும் கலாச்சாரம் வளர்ந்திருக்கிறது. வீட்டிற்கும் தனக்கும் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் குழந்தைக்கும் அளிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது.

3. குழந்தைகள் நாளைய பெரியவர்கள். எனவே குழந்தையைக் கவர்ந்துவிட்டால், அது அந்த நிறுவனத்தின் நீடித்த வாடிக்கையாளர்.

எனவே இன்றைய சந்தை, விற்பனைக்கு ஒரு யுக்தியாகக் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றதோ..

இது ஆக்கப்பூர்வமா? ஆபத்தா? உங்கள் சிந்தனைக்கு.. உங்கள் கருத்துப்பதிவுக்கு...

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT