பெண்களின் முகத்திற்கு அழகூட்டும் இயற்கை கொடை மஞ்சள். ஆரோக்கியம் தரும். சருமத்திற்கு பொலிவைத் தரும். நமது பாரம்பரிய உணவுகளிலும், அழகு சாதனப் பொருட்களிலும் மருத்துவ குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் மூலம் நிரூபித்து வருகின்றனர். புதிய கண்டுபிடிப்பாக மஞ்சள் கிழங்கானது ஆஸ்டியோ பொராசிசை (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று உறுதி செய்துள்ளது.
மஞ்சளை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து சருமத்தைப் பராமரித்து வந்தால், சருமத்தின் கருமை நிறம் முற்றிலும் நீங்கி சருமம் விரைவில் சிவப்பழகு பெறுவதை உணரலாம். இப்படி சிவப்பழகு தரும். மஞ்சள் முகப் பூச்சுக்களை காண்போம்.
மஞ்சள் மற்றும் தேன்:
மஞ்சள் தூளை ஒரு ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் மைதா சேர்த்து கலந்து கெட்டியான பேஸ்ட் போல் செய்து முகம் மட்டும் கழுத்தில் தடவி, பத்து நிமிடம் ஊற வைத்து கழுவினால் ,சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும்.
மஞ்சள் மற்றும் சந்தனம்!
பருக்கள் நீங்கி சருமம் பளிச்சென்று தோற்றம் தர வேண்டுமெனில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பேஸ்ட், சிறிது சந்தன பொடி ,ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்துக்கொண்டு அந்தக் கலவையை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
மஞ்சள் மற்றும் பன்னீர்:
ஒரு ஸ்பூன் பன்னீரில் மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் சருமம் ரிலாக்ஸ் ஆவதுடன் சிவப்பழகும் பெறும்.
மஞ்சள் மற்றும் முள்தானி மெட்டி:
அனைவருக்குமே முல்தானி மெட்டியைப் பற்றி நன்கு தெரியும். அதிலும் முல்தானி மெட்டி பருக்கள் மற்றும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணையைப் போக்க வல்லது. முல்தானி மெட்டியை பாலுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவினால் சருமம் பளிச்சென்று காணப்படும்.
மஞ்சள் மற்றும் கடலை மாவு:
ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். இதில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து பசை போல பிசைந்து முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ முகம் மிருதுவாகும்.
மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டுக் குழைத்து முகத்திலும் கழுத்திலும் பூசவும். உலர்ந்ததும் பயத்த மாவை தேய்த்துக் குளித்தால் சருமம் பளபளப் பாகவும் ,மிருதுவாகவும் இருக்கும்.
கடலை மாவில் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட்போல செய்து முகத்தில் தடவவும். நன்கு உலர்ந்த பிறகு கால் மணி நேரம் கழித்து கழுவவும். வாரம் இரு முறை இதை செய்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
மஞ்சளுடன் சர்க்கரை:
ரெட் சாண்டல் பொடியுடன் பாலாடை, மஞ்சள் தூள், சர்க்கரை, மற்றும் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து தடவலாம்.
மஞ்சள் தூளுடன் பார்லி:
பார்லி அரிசியை பொடித்து அத்துடன் சம அளவு மஞ்சள் தூள் சேர்க்கவும். இதில் மோர் கலந்து பசை போல குழைக்கவும். இதை முகத்திலும், கழுத்திலும் பூசி 20 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் முகத்தின் இயல்பான நிறம் கிடைத்துவிடும்.
மஞ்சளுடன் தக்காளிசாறு:
மஞ்சள் தூளில் தக்காளி சாறு கலந்து பசை போல் செய்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால் அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.