மங்கையர் மலர்

கோடையை சமாளிக்க உதவும் பழங்கள்.

கோவீ.ராஜேந்திரன்

கோடைக்காலத்தில் கடும் வெப்பம் காரணமாக நமது உடல் நீர்ச்சத்து குறைந்து, உடல் ஆற்றலை இழக்கிறது. அதனை ஈடு செய்ய சில ஆற்றல் மிக்க பழங்கள் துணை நிற்கிறது என்கிறார்கள். கோடைகாலத்தில் அவ்வப்போது இம்மாதிரியான பழங்களை எடுத்து கொள்வது அவசியம் அவற்றில் சில பழங்கள்.

          ஆப்பிள்

திலுள்ள நீர்ம நார்ச்சத்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வைட்டமின் சி யும் இதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஒரு தெம்பை தருகிறது. மேலும் ஒரு ஆப்பிளில் ஒரு நாளைக்கு தேவையான 14 சதவீத அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளது.

          ஆரஞ்சு

திலுள்ள வைட்டமின் சி யும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பெப்டின் சத்தும் கோடைகாலத்தில் சிறுநீரகங்களை பாதுகாத்து சிறுநீரக கோளாறுகள் வராமல் பார்த்துக்கொள்கின்றன.

           திராட்சை

திலுள்ள வைட்டமின் சி யும்,  கே யும் மற்றும்  குறைந்த கொழுப்பும், சோடியமும் கோடைக்கால தலைவலி மற்றும் செரிமான பிரச்சனைகளை தடுப்பதுடன், வெயிலின் தாக்கத்திலிருந்து தோலையும் பாதுகாக்கிறது.

          கொய்யா

திலுள்ள வைட்டமின் ஏயும், போலேட்,பொட்டாசியம், காப்பர் மற்றும் மெக்னீசியம் சத்தும், நீர்த்த நார்ச்சத்தும் கோடையி்ல் ஹார்மோன் பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுப்பதுடன், சர்க்கரை நோயாளிகளின் நலனையும் பாதுகாக்கிறது. கர்ப்பினிகளின் நலன் காப்பதுடன் கோடைக்காலத்தில் மூளை சூடு அடைவதையும் தடுக்கிறது.

      தர்ப்பூசணி

திலுள்ள அதிகப்படியான பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் கோடைகாலத்தில் எழும் உடல் தசை மற்றும் நரம்பு கோளாறுகளை சரி செய்வதுடன் செல் அழிவிலிருந்தும் பாதுகாக்கிறது. உடலின் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

      முலாம்பழம்

வற்றிலுள்ள சில ஆற்றல் மிக்க சத்துக்கள் கோடை வெப்பத்தால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை தவிர்த்து உடலை நீரோற்றமாக வைக்கவும் உதவுகிறது.

      எலுமிச்சை பழம் 

கோடை வெப்பம் தொடர்பான அசௌகரியங்களை போக்கி உடலை குளிர்ச்சிப்படுத்தும் ஆற்றலுடையது. பொதுவாக கோடைக்காலத்தில் செரிமானப் பிரச்ளைகள் அதிகம் ஏற்படும் இதனை தவிர்க்க எலுமிச்சை சாறு உணவுக்கு முன் பருகுவது நல்ல பலனை தரும். ஒரு நாளைக்கு இரணடு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகலாம்.

      ஸ்டிராபெர்ரி

திலுள்ள சில ஆபூர்வ சத்துக்கள் கோடைகாலத்தில் தோல்களில் எழும் கோளாறுகளையும், கோடைக்கால வலிகளையும், ஹார்மோன் பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்கிறது.இதிலுள்ள அதிகப்படியான வைட்டமின் சி (98%) கோடைக்காலத்தில் வெயிலின் புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்து கண்களின் லென்சுகளை பாதுகாக்கிறது.

     கிவி பழம்

  திலுள்ள அதிகப்படியான போலேட், பொட்டாசியம் மற்றும் நீர்ம நார்ச்சத்து இரத்தத்திலுள்ள அடர்த்தியைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுவதுடன், கோடைக்காலத்தில்  நன்றாக தூக்கம் வரவும் உதவுகிறது. கர்ப்பிணிகளையும், குழந்தையையும் கோடைக்கால நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

கோடைக்காலத்தில் செரிமானப் பிரச்சனைகளால் அவதிப்படுகிறவர்கள் உணவுக்குப் பின் ஒரு கிவி பழம் சாப்பிடலாம். காரணம் இதிலுள்ள ஆக்டினியா எனும் சத்து புரதங்களைக்கூட எளிதில் செரிக்கச்செய்யும் ஆற்றலுடையது.  சிறந்த மலமிளக்கியும் கூட.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT