மங்கையர் மலர்

ஹைக்கூ கவிதைகள்!

மங்கையர் மலர்

கூர்மையான ஆயுதங்கள் பட்டியலில்

முதன்மையாக சேர்ந்துகொண்டன

கடுமையான சொற்கள்...!

மொழிகள் பல

மௌனமாகின்றன

பேசாத தருணத்தில்...!

கன்றிருக்கும் ஆகாயத்தைச்

அடக்கி விட்டேன்

சிறு புகைப்படமாய்...!

ழுதி முடிக்காமல்

எட்டி நிற்கும் வரியில்தான்

எத்தனை கற்பனைகள்...!

றைந்து சாற்றப்பட்டு

அலறும் கதவில் அம்பலமாகிறது

அவள் கோபத்தின் அளவு!

மொழி ஆர்வலர்களே

விழி பிதுங்குவது

மழலை மொழியில்...!

றைந்து ஒளிந்துகொண்டு

மௌனமாக விளையாடுகிறான்

மேகங்களிடம் சந்திரன்!

ந்தாரை விழுங்கி

பசியாற்றிக்கொண்டேன்

வாயிற்கதவாய்...!

ல மணி நேரம்

நின்றதின் பலன்

நித்தம் வாடும்

மலர் மாலை தான்

சிலையின் சன்மானம்!

ன் சிறு ஆயுதத்தால்

தன்னவளைத் தன்னிடமிருந்து

பழித்தீர்த்துக் கொண்டது

ரோஜா செடி!

ன்னை மறக்கவே

என்னிடம் வருகிறாய்;

விடிந்ததும் என்னையே

துறக்கிறாய்...

-   இப்படிக்கு உறக்கம்

ஆர். ஐஸ்வர்யா

[B.F.Tech] 3rd Year

National Institute of Fashion Technology college,

Gandhi Nagar, Gujarat.

----------------------------------------------

மனிதம்

காலில் செருப்பு  அணியவில்லை

என்பது நியாபகத்திலேயே இல்லை,

மனித கழிவுகளை மிதிக்கும் வரை.

ஏழை குழந்தை ...

-ஃபாத்திமா சஹானா

Bsc.psychology 1 st year

Sadakkathullah appa college

Tirunelveli district

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT