மங்கையர் மலர்

இனிய சினேகிதி, ஃபிளாஸ்க்!

மங்கையர் மலர்

ந்த அவசர யுகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஃபிளாஸ்க் அத்தியாவசிய இடம் பிடித்துள்ளது. காப்பி டிகாக் ஷன் இறங்கிய கையோடு பாலைக் காய்ச்சிய உடனே,  தனித் தனி ஃபிளாஸ்குகளில் வைத்துக்கொண்டால் ஒவ்வொருவருக்காய்க் காப்பி கலந்து சூடு செய்து எரிபொருள், நேரம், மிச்சம். காலை நேர அவசரத்தில் ஏற்படும் எரிச்சல் வராது. கொஞ்சமாய்க் காப்பி கலந்து சுடவைத்து. பாத்திரம் கரும்புள்ளி குத்திக் கொள்ளும் அவலம் ஏற்படாது.

ஃபிளாஸ்கை உபயோகித்தால் மட்டும் போதாது. அதைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்ளும் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

1. அதிக சூட்டை அதிக நேரம் நீடித்து வைத்துக்கொள்ள ஃபிளாஸ்கை முழுவதும் நிரப்புங்கள். (பாதி, முக்கால் ஃபிளாஸ்க் நிரப்பக்கூடாது.) மிகச் சூடான அல்லது, மிகக் குளுமையானதாய் ஃப்ளாஸ்கில் ஊற்றப்படும் பானம் இருக்க வேண்டும்.

2. ஃபிளாஸ்க் திடீரென்று சூடான (அல்) குளிர்ந்த பானம் ஏற்பது சற்று சிரமம். சூடான பானம் மாற்றுமுன் ஃபிளாஸ்கில் வெதுவெதுப்பான வெந்நீர் ஊற்றி வைத்து ஐந்து நிமிடம் கழித்து வெந்நீரை ஊற்றி விட்டு பானத்தை ஊற்றி வைக்கவும். இதேபோல் மிகக் குளிர்ந்த பானம் ஊற்றுமுன் பச்சைத் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து, தண்ணீரைக் கொட்டி விட்டுக் குளிர்பானம் ஊற்றி வைக்கவும்.

3. பால் திரிந்து போகாமல் தடுக்க வேண்டுமா? ஃபிளாஸ்கில் ஊற்றி வைக்கப்படும் பால் மிகச் சூடாய் அல்லது மிசுக் குளிர்ந்து இருக்க வேண்டும். பாலை ஊற்றும் முன் ஃபிளாஸ்கைச் சூடான அல்லது குளிர்ந்த பானம் ஏற்கும் தட்பவெப்ப நிலைக்குத் தயார் செய்ய வேண்டியது (2 ஆம் குறிப்பு) அவசியம். வெதுவெதுப்பான பாலை ஃபிளாஸ்கில் ஊற்றி வைத்தால், அது திரிந்து போவது தவிர்க்க முடியாதது மேலும் ஃபிளாஸ்கின் மூடி, கப் இவற்றையும் வெந்நீரில் சுத்தம் செய்து பிறகு மூடவும்.

4. ஃபிளாஸ்கில் ஊற்றப்பட்ட டீ கசந்து சுவையிழந்து போவதைத் தடுக்க... ஃபிளாஸ்கில் ஊற்றப்படும் முன் டீயை இரண்டு முறை வடிக்கட்டி, நல்ல சூட்டில் ஊற்றி வைக்க வேண்டும். டீ இலைத் துணுக்குகள் ஃபிளாஸ்கில் ஊற்றி வைக்கப்படும் டீயில் இருக்கக்கூடாது. இப்படிச் செய்தால் மணமிக்க சுவையான டீ ஃபிளாஸ்கில் இருக்கும்.

ஃபிளாஸ்கை உபயோகிக்காத நேரங்களில் முடியையும் அடைப்பானையும். எடுத்து வைத்து, ஃபிளாஸ்கைத் திறந்துவைக்கவும், சில ஃபிளாஸ்க்குகள் தலை கீழாய்த் தொங்க விட முடியும். அப்படித் தொங்க விடுவதால் திறந்து இருக்கும் ஃபிளாஸ்கில் கரப்பு , ஈ போன்றவை அசுத்தம் செய்ய முடியாது.

1. ஃபிளாஸ்கை நேரடியாய்க் குழாய்த் தண்ணீரில் பிடித்து அலம்பக் கூடாது.

2. ஃபிளாஸ்கைத் தண்ணீர்த் தொட்டியில் முக்கி அலம்பக் கூடாது.

3. ஃபிளாஸ்கில் வெந்நீர் நிரப்பி சில டீஸ்பூன் சமையல் சோடா உப்பைப் போட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு. மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவும் உலர்ந்த சோப்புத் தூளும் உபயோகிக்கலாம். சாம்பல், கிளீனிங் பவுடர்கள் ஆகியவை கீறல் உண்டாக்கக் கூடியவை. இவற்றைத் தவிர்க்கவும்.

ஃபிளாஸ்கின் மேல் பாகத்தை, சோப்பு நீரில் ஈரத்துணியை நனைத்து நன்கு துடைத்து உலர விடவும்.

ஃபிளாஸ்கின் பிளாஸ்டிக் கப்,  அடைப்பான் இவைகளை சோப்பு நீரில் அலசவும். அழுக்கு அடைந்திருந்தால் மென்மையான வளையும் தன்மையுடைய பிரஷ்ஷால் சுத்தம் செய்யவும். பிளாஸ்டிக் பாகங்களை வெந்நீரில் அலம்புதல் கூடாது.

வாய் அகன்ற ஃபிளாஸ்குகளில் ஐஸ் க்யூப்களை வைக்கும்போது, ஃபிளாஸ்கை நிற்க வைத்து, தட்டென்று ஐஸ் க்யூப் போடக்கூடாது. ஃபிளாஸ்க்கைச் சாய்த்து வாயருகே ஐஸ் க்யூப் போட்டு. மெதுவாக நழுவி உள்ளே செல்லச் செய்யவும்.  ஃபிளாஸ்கில் இருந்து ஐஸ் க்யூப் எடுக்க உலோக ஸ்பூன் உபயோகிக்கக் கூடாது. கீறல் விழும். ஃபிளாஸ்க் ரீஃபில் உடையும்

பல ஃபிளாஸ்குகளில் அடிப்புறம் திருகி திறக்கும் அமைப்புகள் இருக்கும். தவறுதலாய் ஃபிளாஸ்கின் பிளாஸ்டிக் உறைக்கும் ரீஃபில்லுக்கும் இடைப்பட்ட இடத்தில் சிந்த நேரிடும் திரவத்தை நீக்க, ஜாக்கிரதையாய் அடித் திருகு அமைப்பைக் கழற்றி, சுத்தம் செய்து மறுபடி முடிந்த அளவு டைட்டாய்த் திருகி விடவும். ஜாக்கிரதையாய்ச் கையாண்டால் தெர்மோ ஃபிளாஸ்குகள் நீடித்து உழைக்கும், வேலை பளுவைக் குறைக்கும்.

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

SCROLL FOR NEXT