மங்கையர் மலர்

வியர்வை வாடையைத் தவிர்க்க சில வழிமுறைகள்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

இந்த சீசனில் வெப்பம் அதிகமாக உண்டாவதால் உடல்சூடு அதிகமாகும். நம் உடலை அதிக வெப்பத்தில் இருந்து காக்க வியர்வை சுரப்பிகள் அதிக அளவில் வியர்வை நீரை சுரந்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. வியர்வை சிலருக்கு நார்மலாக இருக்கும். சிலருக்கோ அதிக அளவில் சுரந்து, கற்றாழை நாற்றம் போல வாடையை உண்டாக்கி முகம் சுளிக்க வைக்கும். வாடையாக இருப்பதோடு வியர்க்குரு, வேனல் கட்டி, அரிப்பு என பல தொல்லைகளை கொடுக்கும்.

இதை வீட்டிலேயே எளிமையாக சரிசெய்யலாம். அதிக அளவு நீர் அருந்துதல், நன்னாரி, வெட்டி வேர்குடிநீர், இளநீர், பதநீர் போன்றவற்றை அடிக்கடி பருகலாம்.

தர்பூசணி, நுங்கு, வெள்ளரி தயிர், மோர் என குளிர்ச்சியானதை உணவாக உட்கொள்ளும் போது வியர்வை வாடையைத் தவிர்க்கலாம்.

வாகைப்பூ, விளாம்பிச்சை வேர், சிறுநாகப்பூ, பாச்சோத்திப் பட்டை போன்ற மூலிகைகளை அரைத்து உடலில் பூசி குளித்தால் அதிக வியர்வை நீங்கும்.

பன்னீர் ரோஜாவை அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.

இலவங்க இலை, பாச்சோத்திப் பட்டை, கடுக்காய், சந்தனம் போன்றவற்றை அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் வியர்வை வாடையை நீக்கலாம்.

வேப்பிலை, மஞ்சளை குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வியர்வை மட்டுபடுவதுடன் வியர்க்குரு, வேனல் கட்டி, உடல் எரிச்சல் போன்றவை குணமாகும்.

வியர்க்குருவை குணமாக்க நுங்கு நீர் நல்ல பலன்களை தரும்.

ஆவாரம்பூவை அரைத்து உடலில் பூசி குளித்தால் வியர்வை வாடை போவதோடு, அதை குடிநீராக்கி குடிக்க நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

வியர்வை வாடையைத் தவிர்க்க அதிக காரம், மசாலா உணவுகள், இறைச்சி போன்றவற்றை சாப்பிடாமல் இருக்கலாம்.

அதிக பருமன், ஹார்மோன் மாறுபாடுகளும் உடலின் வியர்வைக்கும் அதனால் ஏற்படும் அசௌகரியத்துக்கும் காரணமாகிறது.

நீண்டகால அஜீரணம், மலச்சிக்கல், கல்லீரல் நோய் போன்றவற்றாலும் வியர்வை நாற்றம் உண்டாகும்.

நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள இப்பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இந்த கோடை சீசனில் இருவேளை குளிப்பதாலும், அதிக நீர்ச்சத்துள்ள காய், பழ வகைகள், சாப்பிடுவதாலும் வியர்வை நாற்றம் நீங்கும்.

குளிக்கும் நீரில் யுடிகொலோன், பன்னீர் சில துளிகள் என கலந்து குளிக்க வியர்வை வாடை போவதோடு நாள்முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT