மங்கையர் மலர்

பலவிதமான நோய்களுக்கும் மஞ்சள் மருந்தாக மாறுவது எப்படி?

சேலம் சுபா

ஞ்சள் விதைகளில் உள்ள  ஒரு விதமான ரசாயனப் பொருளான குர்குமின் என்பதுதான் மஞ்சளின் நிறத்துக்கும் மருத்துவக் குணத்துக்கும் காரணமாகிறது. இந்த குர்குமின்தான் புற்றுநோய்க்கட்டிகள் வராமல் தடுக்கவும், ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைத் தடுக்கவும், உடலுக்குள் வரும் கெடுதல் தரும் பாக்டீரியாக்களை முறியடிக்கவும் உதவுகிறது. இந்த குர்குமின் தற்போது அதிகளவில் இருக்கும் வயது முதிர்ந்தோரை பாதிக்கும் அல்சைமர் எனப்படும் நினைவுக் குறைபாட்டுக்கு காரணமாகும் மூளையில் படியும் படிவைக் (Plaque) குறைக்கிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மஞ்சளின் மருத்துவக்குணங்கள் ஏராளம். அவற்றுள் சில இங்கு...

*மூக்கடைப்பு மற்றும் மயக்கம் போட்டு விழுந்தவர்களின் நாசியருகில் மஞ்சளை சுட்டு, அப் புகையைக் காட்டினால் தெளிவு கிடைக்கும்.

*மஞ்சள் தூளைப் பாலில் கலந்து காய்ச்சி  சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்றுஎரிச்சல் போன்றவை சரியாகும். .

*மஞ்சள் போட்டுக் கொதிக்க வைத்த வெந்நீரால் வாய் கொப்பளிக்கும்போது சளி முறிந்து எளிதில் வெளியாகும் .

*இரவு படுக்கச் செல்லும் முன் இளம் சூடான பாலில் சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அருந்தினால் இருமல் சரியாகும் .

*மஞ்சளை அரைத்து பூசினால் சரும நோய்கள் விரைவில் குணமாகும். மேலும் கரப்பான், சொரி, சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு மேல் பூச்சாக மஞ்சளைப் பூசி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

*விழுதாக அரைத்த மஞ்சளை சுட வைத்துப் பற்றுப் போட்டால் கட்டிகளினால் ஏற்படும் வீக்கம் குறையும்.

*புற்றுநோயையும் சரி செய்யும் ஆற்றல் கொண்டது மஞ்சள்.

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

SCROLL FOR NEXT