மங்கையர் மலர்

வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள்

ஆர்.பிரசன்னா

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன.

வெண்டைக்காயில் உள்ள அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது.

இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.

கர்ப்ப காலத்தில் வெண்டைக்காய் உட்கொள்வது நன்மை பயக்கும். ஃபோலேட் எனப்படும் ஊட்டச்சத்து வெண்டைக்காயில் காணப்படுகிறது, இது கருவில் உள்ள சிசுவின் மூளை வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் ஊற வைத்த நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். 

வெண்டைக்காயில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள், சிறுநீரக கற்களை அகற்ற உதவுகின்றன .

இதில் உள்ள பெக்டின் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, அதே போல் அதில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது, இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.

வெண்டைக்காயில் காணப்படும் பசையம் மற்றும் வைட்டமின்-கே , நம் எலும்புகளுக்கு மிகவும்பயனுள்ளதாக இருக்கும்.

பிஞ்சு வெண்டைக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரைச் சேர்த்துக் குடித்தால் இருமல், நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் சரியாகும்.

வெண்டைக்காயைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்; ஈறு தொடர்பான நோய்கள் சரியாகும்.

முற்றிய வெண்டைக்காய் மூன்று, ஒரு தக்காளி, பூண்டுப்பல் மூன்று, சின்ன வெங்காயம் இரண்டு, மிளகு ஐந்து, கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி உப்பு சேர்த்துக் குடித்தால் சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வெண்டைக்காயில் உள்ள நார்ச் சத்து மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல் புண்ணையும் ஆற்றும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT