43 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மங்கையர் மலருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். நானும் மங்கையர் மலரும் என்ற தலைப்பில் ஒரு ஆண் வாசகராகிய நான் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். ஏனென்றால் மங்கையர் மலரை நான் எப்பொழுதும் பெண்கள் இதழாக பார்த்ததில்லை. அதேபோல் மங்கையர்மலரும் ஆண் பெண் என்ற பாலின பாகுபாடு பார்ப்பதில்லை.
சிதம்பரத்தில் நடந்த மங்கையர் மலர் வாசகிகள் சந்திப்பில் எனக்கு அழைப்பு விடுத்து நானும் அந்த விழாவில் கலந்து கொண்டு வாசகிளோடு இணைந்து என்னையும் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார் ஆசிரியர். இந்த நிகழ்வு என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத ஒரு நிகழ்வு.
1988 முதல் நான் பத்திரிகைகளில் எழுதி வருகிறேன் முதல் முதலில் என் நகைச்சுவை துணுக்கு ஒரு முழு பக்கத்தில் வெளியானது மங்கையர் மலர் இதழில் தான் என்பதை பெருமையோடு கூறுகிறேன்.
மங்கையர் மலரை பொறுத்தவரை வாசகர்களை 100% மதிக்கும் பத்திரிக்கை என்பதை பெருமையோடு கூறுகிறேன். இன்றளவும் நான், என் மனைவி, என் மகன், மூவருமே விரும்பி படிக்கும் எங்கள் குடும்ப இதழ் என்பதை பெருமையோடு இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன். அன்று இதழாக படிக்கும் பொழுது போட்டி பலமாக இருக்கும். ஆனால் இன்று இணையத்தில் படிக்கும் பொழுது அவரவர் மொபைலில் இருந்து அவரவர் படித்துக் கொள்கிறோம். அச்சு இதழில் இருந்ததை விட இப்பொழுது பிரம்மாண்ட வளர்ச்சி என்றுதான் கூற வேண்டும் நூற்றாண்டுகள் தொடர மனதார வாழ்த்துகிறேன்.