மங்கையர் மலர்

நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் வலி நிவாரணிகள்!

மங்கையர் மலர்

லை வலியிலிருந்து குதிக்கால் வலி வரை அங்கம் அங்கமாக எல்லோருக்கும் ஏதோ ஓர் உபாதை இருக்கவே செய்கிறது. தினமும் நம் சமையலில் சின்னச் சின்ன மாற்றங்களை உட்படுத்தி உண்டு வந்தால் ஓரளவு இந்த வலிகளைச் சமாளிக்கலாம்.

துருவிய இஞ்சி இரண்டு டீஸ்பூனுடன், 1 டீஸ்பூன் சுக்குப் பொடி கலந்து, சமையலில் சேர்த்து உண்டு வந்தால் உடலில் ஏற்படும் பலவித வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

கிராம்பு – இதில் உள்ள ‘யுஜினால்’ என்ற பொருள் ஒரு சிறந்த வலி நிவாரணி. பல் வலிக்கு கிராம்பு சிறந்த மருந்து. தினமும் 1 டீஸ்பூன் கிராம்புப் பொடி சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவு குறைகிறது.

தினமும் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகருடன் எட்டு அவுன்ஸ் தண்ணீர் கலந்து குடித்து வந்தால், அமிலத் தன்மையால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் மட்டுப்படுமாம்.

வெதுவெதுப்பான சூட்டில் உள்ள பூண்டு எண்ணெய், காது வலியைக் குறைப்பதுடன் வலி  ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.

தினமும் செர்ரிப் பழங்களை உண்டு வந்தால் ஒரு சிறந்த வலி நிவாரணியாகச் செயல்படும் என்கிறார்கள். சாதாரணமாக நாம் சாப்பிடும் வலி நிவாரணி மாத்திரைகளை விட பத்து மடங்கு சிறந்ததாம்.

சூட்டு வலி அல்லது அடிவயிறு வலிக்கு தினமும் மீன் சாப்பிடுவது  நல்லது.

மாதவிடாயின்போது வரும் வயிற்று வலிக்கு தினமும் 2 கப் தயிர் சாப்பிடுவது நல்ல பயன் தரும். வயிற்று வலி நன்றாகக் குறைந்துவிடுமாம்.

தினமும் சமையலில் மஞ்சள் பொடியைச் சேர்ப்பது நல்லது. சிறந்த ஆன்டி-செப்டிக் மற்றும் சிறந்த வலி நிவாரணி.

பெண்களுக்கு ஏற்படும் சூதகவலிக்குத் தினமும் 1 கப் ஒட்ஸ் சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும்.

கால் பாத வெடிப்பு, கால் நகப் புண்களுக்குத் தினமும் வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் நின்று வந்தால் நிவாரணம் தெரியும்.

யிறு உப்புசம், வேதனைக்கு பைனாப்பிள் ஜூஸ் சிறந்த நிவாரணி. மோரில் வெந்தயப் பொடி போட்டுக் குடித்தால் வயிற்று வலி குணமாகும். எலுமிச்சைச் சாற்றில் உப்பு, சர்க்கரை சேர்த்துக் குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.

தீராத முதுகுவலிக்கு திராட்சை நல்ல மருந்து. தினமும் ஒரு கப் திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் முதுகு நரம்புகளைத் தளர்த்தி ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதால் வலி வெகுவாகக் குறையும்.

தினமும் 10 தம்ளர் தண்ணீர் கண்டிப்பாகப் பருக வேண்டும். கால் வலி, மூட்டு வலி, தோள் பட்டை வலி என்று எல்லா வலிகளுக்கும் சிறந்த நிவாரணி தண்ணீர், உடலில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி விடுவதால் வலி பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கிறது.

சீறுநீரகக் கோளாறுகளுக்கு ‘புளூபெர்ரி’ பழம் சிறந்தது.

தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி, ஜலதோஷம் போன்ற உபாதைகளுக்கு தேன் சிறந்த நிவாரணி.

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

SCROLL FOR NEXT