மங்கையர் மலர்

நோயாளிகளின் புகார் FDA ஆக்க்ஷன்!

மும்பை பர பர (சுடச்சுட)

மும்பை மீனலதா

புகார் எதற்காக? ஆக்‌ஷன் எப்படி? பொதுவாகவே மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்தபின், மாத்திரை, டானிக், ஊசி மருந்து போன்றவைகளை வாங்கி வருமாறு சீட்டு எழுதிக் கொடுப்பது வழக்கம்.

பல இடங்களில். மருத்துவமனையுடன் இணைக்கப் பட்டிருக்கும் மெடிக்கல் ஸ்டோர் அவர்களுக்குத் தெரிந்த மருந்துக் கடைகளில் இருந்து அப்பொருட்களை வாங்குமாறு அழுத்தி கூறுவதுண்டு.

காரணம்…? கிடைக்கும் கமிஷன், நோயாளிகளும், அவர்கள் குறிப்பிட்ட இடம் சென்று வாங்குகையில், கமிஷன் தானாகவே கிடைத்து விடும்.

அவர்கள் குறிப்பிட்ட கடைகளில் வாங்கச் சொல்வதால், துன்பப்பட்ட நோயாளிகள் புகார் கொடுக்க ஆரம்பித்தனர்.

Food and Drug Administration (FDA) ACT 1940 இன் படி, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் கூறும் இடங்களிலிருந்துதான் மருந்து வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது.

இது சட்டப்படி குற்றமாகும். நோயாளிகள் மற்றும் அவதிப்பட்டவர்கள் ஆகியோர்களிடமிருந்து புகார் மேல் புகார் வந்த காரணம் FDA இதில் தலையிட்டுள்ளது.

இம்மாதிரியான செயலில் எந்த ஒரு மருத்துவமனை நிர்வாகமும் ஈடுபடக்கூடாது, கட்டாயப்படுத்துவது கூடாது என மகாராஷ்டிர அரசு அதிரடியாக உத்தரவு பிறப் பித்துள்ளது. மேலும், இச்சுற்றறிக்கையை நிர்வாகத்தின் சார்பில் விளம்பரப்படுத்த வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT