தேவையான பொருட்கள்:
ரெடிமிக்ஸ் பாதாம் பவுடர் – ½ கப், மில்க் மெய்டு - 4 டேபிள் ஸ்பூன், கோதுமை மாவு 4 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 4 ஸ்பூன், ஏலப்பொடி ½ ஸ்பூன்.
செய்முறை:
நெய்யை அடிகனமான கடாயில் 3 ஸ்பூன் விட்டு கோதுமை மாவைச் சேர்த்து நன்கு வறுக்கவும். பிறகு அரிசி மாவைச் சேர்த்து 2 நிமிடம் வறுத்தபின் பாலைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும். அடுப்பைக் குறைத்து வைத்துக்கொள்ளவும். நன்றாகக் கட்டியில்லாமல் கரைத்த பின் சர்க்கரை, ஏலப்பொடி, பாதாம் பவுடர் இவற்றைச் சேர்த்து 2 நிமிடம் கொதித்ததும் மில்க்மெய்டு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விடவும். நெய்யில் திராட்சையை வறுத்துச் சேர்த்து சூடாகப் பரிமாற சுவையாக இருப்பதுடன் செய்வதும் மிகவும் எளிது.
(ரெடிமிக்ஸ் பாதாம் பவுடர் இல்லையென்றால் பால் பவுடர் 4 ஸ்பூன் கரைத்துக்கொண்டு பூஸ்ட், போர்ன்விட்டா இவற்றில் ஏதாவது ஒன்றை 2 ஸ்பூன் சேர்த்துக் கரைத்தும் செய்யலாம். அவசரமாகச் செய்ய இந்த முறையில் பாயசம் செய்து சமாளிக்கலாம்.)