PCOD 
மங்கையர் மலர்

பிசிஓடி(PCOD) பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

சுடர்லெட்சுமி மாரியப்பன்

பிசிஓடி(PCOD) பிரச்னை பல பெண்களிடையே அதிகரித்து வருகிறது. கருப்பையில் நீர்கட்டிகள் உருவாவதை பிசிஓடி என்பர். பொதுவாக ஹார்மோன் சமநிலையின்மையே இதற்கு முக்கிய காரணம் ஆகும். நமது முன்னோர்கள் எல்லாம் இது போன்ற வார்த்தையையே கேள்வி பட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்கள், உடற்பயிற்சிக்கு ஈடான வேலைகள் போன்றவை அதற்கான நிலையை ஏற்படுத்தியதில்லை. ஆனால், நாம் மேற்கொள்ளும் உணவு பழக்கங்கள், ஈடுப்படும் செயல்கள் அனைத்தும் இது போன்ற நோய்களை நாமே வேணும் என்று கேட்பது போலல்லவா இருக்கிறது.

எல்லா பிரச்னைகளுக்கும் நாம் தீர்வு காணுவோமே தவிர, அவை ஏற்படாமல் தடுக்க முயற்சிக்கிறோமா? இல்லை. சரி, ஆரம்பத்திலேயே இதுதான் பிரச்னை என்றாவது கண்டறிந்தால், அதை தடுப்பதற்கான வழியை பார்க்கலாம். அந்த வகையில், இந்த பதிவு பிசிஓடி(PCOD)யை ஆரம்பத்திலே எப்படி தெரிந்துக்கொள்வது என்பதை விளக்குகிறது. 

பிசிஓடி(PCOD) பிரச்னையை ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், மாதவிடாய், கருத்தரித்தல் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைங்களை ஓரளவு தடுக்க முடியும். பிசிஓடி(PCOD) பிரச்னையை, அதன் அறிகுறிகளை வைத்து ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.

பிசிஓடி(PCOD)  அறிகுறிகள்

மாதவிடாய் பிரச்னை

பிசிஓஎஸ் பிரச்னை இருப்பதன் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்று சீரற்ற (அ) ஒழுங்கற்ற மாதவிடாய்தான். ஒரு பெண்ணிற்கு மாதவிடாயானது 28 நாள் இடைவெளியில் இருந்தால் அது சீரான மாதவிடாய். 30 அல்லது 35 நாட்கள் இருந்தாலும் அது சீரானதே. ஆனால் அதையும் தாண்டி நாட்கள் சென்றால் அது  சீரற்ற (அ) ஒழுங்கற்ற மாதவிடாய்.

ஆனால் சில பெண்களுக்கு எப்போதாவது சில சமயங்களில் மாதவிடாய் பிரச்சினை ஏற்படலாம், அது இயல்பே. ஆனால் தொடர்ச்சியாக உங்களுக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்வது அவசியம்.

உடல் எடை

பெண்களுக்கு திடீரென உடல் எடையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், குறிப்பாக உடல் எடை அதிகமானால் அது பிசிஓடி (PCOD) பிரச்சினையின் முக்கிய அறிகுறியாகும். சில பெண்கள் எடை அதிகரிக்கிறதே என்று ஜிம் செல்வார்கள். நீங்கள் முதலில் அணுகவேண்டியது மருத்துவரைதான். ஏனெனில், பிசிஓடி(PCOD) பிரச்சினையின் முக்கிய அறிகுறியாக உடல் எடை இருக்கும்போது ஒருமுறை பரிசோதிப்பது நல்லது.

சருமத்தில் பிரச்னை

பிசிஓஎஸ் பிரச்சினை ஏற்பட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் உடல் எடைகளில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் கூட நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் சில சருமப் பிரச்சினைகளும் இதன் அறிகுறியாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

பிசிஓஎஸ் பிரச்சினை இருக்கும்போது சருமத்தில் அதிகமாக பருக்கள் உண்டாகுமாம்.  அதிக எண்ணெய் சுரப்புடன் கூடிய பருக்கள், முகத்தில் முடி முளைப்பது, ஸ்டிரெச் மார்க்ஸ் போன்ற மாற்றங்கள் ஏற்படுமாம்.

உடம்பு வலி

அதேபோல், உடல் வலி அதிகமாக ஏற்படும். குறிப்பாக மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே கடுமையான உடல் வலி உண்டாகும். உடலில் எல்லா பகுதியிலும் வலியை உணரலாம். முக்கியமாக முதுகுவலி அதிகமாக இருக்கலாம். அதோடு சேர்ந்து அதிகப்படியான உடல் சோர்வும் உண்டாகும். எனில், நீங்கள் அதிகமான உடல்வலியை உணர்ந்தாலும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு பிசிஓடி(PCOD) என்ற நீர்க்கட்டி இருப்பதற்கான அதிக வாய்ப்புள்ளது. இதை ஆரம்பத்திலே அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், பின்னால் ஏற்படும் பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.

சோஹா அலிகான் முகப் பளபளப்பிற்கு இந்த மூன்று உணவுகள்தான் காரணம்!

சிறுகதை: களிமண் பிள்யைாரும் மூணு யூனிட் இரத்தமும்!

சருமத்தில் இந்த அறிகுறிகளா? ஜாக்கிரதை! 

மதங்க முனிவர் காட்சி கொடுத்த திருநாங்கூர் மாதங்கீஸ்வரர்!

சிறுகதை: குடிகாரர்களின் குடும்பம்!

SCROLL FOR NEXT