Relax time...
Relax time... Image credit - pixabay.com
மங்கையர் மலர்

மாலை நேர சோர்வே... போ போ போ!

கோவீ.ராஜேந்திரன்

பொதுவாக வெளியே வேலைக்கு செல்பவர்களில் அநேக பேர் எட்டு மணி நேர வேலைப்பளுவால் மாலை ஆனதும் படிப்படியாக உடல் ஆற்றல் குறைந்துகொண்டே வந்து,. மாலை நேரத்தில் சோர்வுக்கு ஆளாவார்கள். அப்படி, மாலை நேரம் வந்ததும் சோர்ந்துபோய் விடுகிறீர்களா? மருந்துகளைத் தேட வேண்டாம். பெரும்பாலான நேரங்களில், வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் சோர்வைத் தடுக்கலாம்

உங்கள் வேலை ஒரு மாதிரி இருப்பதனால் வாரம் ஒரு முறை அதை அடியோடு மாற்றி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு மாலையையும் ஒவ்வொரு விதமாக கழிப்பது என்று திட்டம் போட்டுக்கொள்ளுங்கள். அந்த நேரத்தை எதிர்பார்க்கும் உணர்ச்சியில் உங்கள் சோர்வு மாறிவிடும். தபால் தலை மற்றும் நாணய சேகரிப்பு முதல் புகைப்படம் எடுத்தல் மற்றும் தொல்லியல், சமையல் மற்றும் தோட்டக்கலை, ஓவியம், நடனம் என ஒரு சிலவற்றை உங்களின் அன்றாட ஹாபியாக மாற்றலாம். மேலும், உங்கள் குழந்தையின் ஆர்வத்தை ஊக்குவிப்பதன் மூலம் உங்களது ‘மூடை’ மாற்றலாம்.

நாம் நினைப்பதைப்போல இரண்டு மடங்கு சக்தி நம் உடலுக்கு உண்டு என்று விஞ்ஞானம் சொல்கிறது. அதை நிலைப்படுத்திக் கொண்டு வேலையைச் செய்யுங்கள்.

அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்கள் ஒரு விஷயத்தைப் பின்பற்றுவது புலப்படும். வழக்கமாக அவர்கள் தொடர்ந்து 40 முதல் 60 நிமிடங்கள் வரைதான் வேலை செய்கிறார்கள், அதன் பின்னர் தங்கள் உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்ய ஒரு சில நிமிடங்கள் ரெஸ்ட் எடுப்பார்கள். இதே பழக்கத்தை நீங்கள் பின்பற்றுவது உங்களை ரீசார்ஜ் செய்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். மாலையில் சோர்வு வராது.

பிற்பகல் முடிவில், பகல் முழுவதும் செய்த வேலைக்கு எதிர்மாறான ஒன்றை அமைத்துக்கொள்ளுங்கள். ஆபீஸீலேயே இருப்பவர்கள் காலாற நடக்கலாம். பகல் முழுவதும் வெளியே வேலை செய்பவர்கள் குளித்துவிட்டு ஏதாவது படிக்கலாம்.

உங்கள் நேரத்தைச் சுறுசுறுப்பான குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு. வாரத்திற்கு ஒருமுறை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) உங்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம் என்று மாலை நேரத்தைச் செலவிட்டு பாருங்கள். உங்கள் மனச்சோர்வு குறையும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடும்.

Relax time...

உங்கள் வேலையில் இடைவேளை இருந்தால் பிற்பகலில் பத்து நிமிடங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஓய்வு எடுங்கள் - வேலை செய்யும்போது அல்ல. அமர்ந்தபடியே வேலை என்றால் அல்லது உடல் வலியாக உணர்ந்தால் ஐந்து நிமிட ஸ்ட்ரெச்சஸ், உடல் அசைவுகளைச் செய்வது நல்லது. இதனால் தசைகள் இலகுவாகி, ரத்த ஓட்டத்தின் பாய்ச்சல் தீவிரமடையும். இதனால் உடல் உடனடியான ஆற்றலைப் பெறும். உடலும் ரிலாக்ஸாக இருக்கும்.

தினமும் டூவீலரிலும், பஸ்களிலுமே பயணப்படுகிறீர்களா? அதை விடுத்து மாலையில் ஒரு நாள் கொஞ்சம் நடந்து போய் பாருங்கள். முடியாத பட்சத்தில் மெதுவாக சைக்கிளில் சென்று பாருங்கள். வித்தியாசமான அனுபவங்களைப் பெறுவீர்கள். அதுவே உங்களது மனச்சோர்வை சட்டென்று மாற்றும்.

அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் நவீன டெக்னாலஜி ஆயிட்டங்களிலிருந்து விடுபட்டு மாலையில் ஒரு பூங்கா அல்லது இயற்கை சார்ந்த இடங்களில் கொஞ்சம் நேரம் செலவிட்டு பிறகு வீட்டிற்குச் செல்லுங்கள். இதில் கோயிலுக்குச் சென்று வருவதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உங்களுக்குப் பிடித்த நண்பர்களுடன் கொஞ்சம் நேரம் செலவிட்டு பாருங்கள். அந்த நேரத்தில் செல்போனில் பேசாதீர்கள். உங்களின் சமுதாயச் சூழல் சுவாரஸ்யப்படும்.

வாரத்திற்கு ஒருமுறை உங்களுக்குப் பிடித்த உணவை மாலையில் வெளியே ரசித்து சாப்பிட்டு பாருங்கள். ஒரு சிலருக்கு அது உற்சாகத்தைத் தரும்.

மாலையில் வீட்டிற்குள் வந்த பின்னரும் செல்போன், லேப்டாப் போன்றவற்றை கட்டிக்கொண்டு அழாதீர்கள்.

தினமும் ஒரு முழு பக்கம் உங்களுக்கு பிடித்த விஷயங்களை எழுதுங்கள். அது உங்களது மனச்சோர்வை சட்டென்று போக்கி உங்களுக்கு ஓர் உற்சாகத்தைத் தரும்.

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

அவல் நிவேதனம் நடைபெறும் அனுமன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

SCROLL FOR NEXT