ஐபிஎஸ் அதிகாரி ஆவது என்பது இந்த நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கனவு. இந்த கனவை யுபிஎஸ்சி தேர்வின் மூலம் ஒருவரால் ஐபிஎஸ் அதிகாரியாக முடியும். ஆனால், யுபிஎஸ் தேர்வு என்பது இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இந்த கடினமான தேர்வுக்கு வருகிறார்கள்.
இது மிகவும் கடினமான போட்டித் தேர்வு என்பதால், சில நூறு பேர் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு ஊழியராக வாய்ப்பு பெறுகிறார்கள். 2022 யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய தரவரிசையில் 545-வது இடத்தைப் பிடித்த ஐபிஎஸ் அதிகாரி உயர்ந்துள்ளார் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த டென்சிங் யாங்கி.
அருணாச்சல பிரதேசத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான டென்சிங் யாங்கியின் பயணம் உத்வேகம் அளிப்பது மட்டுமல்ல, வரலாற்று சாதனையும் கூட. மதிப்புமிக்க பதவியை அடைவதில் யாங்கியின் முழுமையான அர்ப்பணிப்பு ஆயிரக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஒரு உத்வேகமாக மாறியுள்ளது.
யாங்கி சிவில் சர்வீசஸில் பணியாற்றிய குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது தந்தை, மறைந்த துப்டன் டெம்பா அமைச்சராகப் பணியாற்றியவர். அரசியலில் சேருவதற்கு முன்பு, அவர் இந்திய வருவாய் சேவை மற்றும் இந்திய நிர்வாக சேவை ஆகியவற்றில் சிறந்த அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
அதேபோல் யாங்கியின் தாத்தா அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியை இந்திய ஆட்சியின் கீழ் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றிய மறைந்த நைர்பா கோவின் பேத்தி ஆவார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுபவர்களின் வரிசையில் இருந்து வரும் யாங்கிக்கு நாட்டிற்கான அர்ப்பணிப்பு இயல்பாகவே இருந்துள்ளது.
இதன்காரணமாக டென்சிங் யாங்கி தனது சிறுவயதில் இருந்தே தனது தந்தையை போல் ஒரு சிறந்த அரசு அதிகாரியாக வேண்டும் என்ற அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும் கொண்டிருந்தார். யாங்கி அஸ்ஸாமில் பள்ளிப்படிப்பு மற்றும் இளங்கலைப் பட்டம் பெற்றார்,
பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் வார்விக் (University of Warwick)பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் இளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) பட்டமும் பெற்றுள்ளார்.
இதனையடுத்து 2017 இல் அருணாச்சல பிரதேச பொது சேவை ஆணையம் (APPSC) தேர்விலும் தேர்ச்சி பெற்றிருந்தார் டென்சிங் யாங்கி. தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு சியாங் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார், அம்மாநிலத்தில் உள்ள Geku Government College ஆசிரியராகவும் சியாங்கி கொள்கை ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆராய்ச்சி அறிஞராகவும் உள்ளார் டென்சிங் யாங்கி.
பின்னர் 2022 இல் யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் தேர்வில் பங்கேற்றார். சிவில் சர்வீசஸ் தரவரிசையில் 545-வது இடத்தைப் பிடித்த ஐபிஎஸ் அதிகாரி உயர்ந்துள்ளார்.இந்த வெற்றியின் மூலம் அருணாச்சல பிரதேசத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் டென்சிங் யாங்கி.