உச்சநீதிமன்றம்  
செய்திகள்

#BREAKING: உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்; உச்சநீதிமன்றம் அதிரடி!

கல்கி டெஸ்க்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்புளித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை பாஜக அரசு 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர் ஒப்புதல் அளித்ததால் இந்த சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்பி பார்திவாலா, பேலா திரிவேதி ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்துக்கு இன்று கடைசி பணி நாள் என்பதால் இன்றைய தீர்ப்பு மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த இட ஒதுக்கீடு இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என நீதிபதி மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.இதை, நீதிபதி பிலா திரிவேதி ஏற்று கொண்டு, அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என நீதிபதி பிலா திரிவேதி தெரிவித்துள்ளார்.

நீதபதி எஸ்பி பார்திவாலாவும் இந்த சட்டத்தில் எந்த விதிமீறலும் இல்லை என கூறி சட்டம் செல்லும் என தெரிவித்துள்ளார்.

நம் அரசியலமைப்பு யாரையும் விலக்க அனுமதிக்கவில்லை. மேலும், இந்த சட்ட திருத்தமானது சமூக நீதியின் கட்டமைப்பையும் அதன் மூலம் அடிப்படை கட்டமைப்பையும் மாற்றுகிறது என நீதிபதி ரவிந்தர பட் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐவரின் கருத்தும் ஒரே வகையில் அமைந்ததையடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் வென்று தீர்ப்பளிக்கப் பட்டது.

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

டைப் A மற்றும் டைப் B இரண்டும் கலந்த ஆளுமைத்தன்மை உள்ளவர்களின் சிறப்பியல்புகள்!

SCROLL FOR NEXT