செய்திகள்

10th பொது தேர்வு முடிவுகள் வெளியீடு!

மதியம் 2 மணிக்கு 11 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

கல்கி டெஸ்க்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

மார்ச் மற்றும் ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற 2022-2023-ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) பொதுத்தேர்வு முடிவுகள் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் இன்று வெளியிடப்பட இருக்கிறது. அதில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியாகி உள்ளது.

இத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10-ம் வகுப்பு முடிவுகள் வெளியானது.

இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in   & www.dge.tn.gov.in  அறிவிக்கப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres)அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதே போல், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 முதல் ஏப். 5-ம் தேதி வரை நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT