செய்திகள்

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தமிழகத்தில் 1,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கல்கி டெஸ்க்

மிழகத்தில் வரும் 12ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,500 சிறப்புப் பேருந்துகயை இயக்க இருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ‘கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருப்பது, வார இறுதி நாட்களான இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்கள் பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக, தினமும் இயக்கப்படும் பேருந்துகளோடு சேர்த்து கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி, தமிழகத்தின் முக்கியமான இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவுக்கும் கூடுதலாக 850 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 1,500 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கும் பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து முக்கியப் பேருந்து நிலையங்களிலும், போதிய அளவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறது’ என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT