19th Asian Games Hangzhou
19th Asian Games Hangzhou  
செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி:தொலைந்த செல்போன் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த சீன ஊழியர்கள்!

ஜெ.ராகவன்

செல்போனை இழப்பது என்பது மன அழுத்தத்துடன்கூடிய அனுபவமாக இருக்கலாம். ஆனால், 5 லட்சத்து 23 ஆயிரம் சதுர பரப்பளவு கொண்ட விளையாட்டு அரங்கில் 10,000 பேர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் போட்டியில் செல்போனை தொலைப்பது நரம்பையே முறுக்கேறச் செய்யும்.

சீனாவில் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்க ஹாங்காங்கைச் சேர்ந்த 12 வயது சிறுமி லியு டியான் யி  வந்திருந்தார். அரங்கில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்த அவர், திடீரென தனது செல்போனை தொலைத்துவிட்டார். மேலும் அந்த செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக பணியமர்த்தப்பட்டிருந்த சீன ஊழியர்கள், கொஞ்சம்கூட மனம் தளராமல் இது ஒன்றும் முடியாத காரியமல்ல என்று கூறி காணாமல் போன செல்போனை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்தனர்.10,000 அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் 5,23,000 சதர மீட்டர் பரப்பளவுள்ள விளையாட்டு அரங்கத்தை சல்லடை போட்டு சலித்து தேடிகண்டுபிடித்தனர்.

லியு டியான் யி என்ற அந்த 12 வயது சிறுமி தொலைத்துவிட்ட செல்போன தேடிக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேல் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. சல்லடை போட்டு தேடிய நேரத்தில் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து சிறுமி தவறவிட்ட செல்போன் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த செல்போனை அச்சிறுமியிடம் ஒப்படைத்தனர். அப்போதுதான் அச்சிறுமி நிம்மதி அடைந்தார். அவரது செல்போன் 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் தொலைந்து போன செல்போனை 5,23,000 சதுரமீட்டர் பரப்பளவுள்ள 10,000 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கும் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் கண்டுபிடிப்பது ஒன்றும் சுலபமான காரியமல்ல. ஆனால், சீன ஊழியர்கள் இது தங்களால் முடியும் என்று கூறி அற்புதங்களை நிகழ்த்திவிட்டனர்.

சீனாவின் ஹாங்ஸு நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப். 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோலாகலமாக தொடங்கிய இந்த விளையாட்டுப் போட்டியை சீன அதிபர் ஜீ ஜின்பிங் தொடங்கிவைத்தார். 45 நாடுகளைச் சேர்ந்த 12,000 வீர்ர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.

ஹாங்ஸுவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சென்ற ஆண்டே நடைபெற்றிருக்க வேண்டும். எனினும் சீனாவில் கோவிட்-19 தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT