இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரி வசூலை மாநகராட்சி அலுவலகம் தற்போது செய்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் 2022-23ம் நிதியாண்டின் முதல் அரையண்டிற்கான சொத்து வரியாக 696.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை, வரும் 15ம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சொத்து வரி செலுத்தும் முறைகளையும் மாநகராட்சி மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. பின்வரும் முறையில் பொதுமக்கள் தங்களது சொத்து வரியினை எளிதாக செலுத்தலாம்.
வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி பெயரில், காசோலைகள் மற்றும் வரைவேலைகள், கடன்,பற்று அட்டை வாயிலாகவும் மாநகராட்சி வரி வசூலிப்பாளரிடம் செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் சொத்து வரி ரசீதுகளில் உள்ள 'க்யூ.ஆர்.,கோடு ' முறையை பயன்படுத்தி, சொத்து வரியை செலுத்தலாம்.
சென்னை மாநகராட்சியின் வலைதளமான https://chennaicorporation.gov.in/gcc/ வாயிலாக எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் சொத்து வரியினை செலுத்தலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக, நேரடியாக பணமாகவும் சொத்துவரியினை செலுத்தலாம்.
'நம்ம சென்னை' மற்றும் பே.டி.எம்., முதலிய கைபேசி செயலி வாயிலாகவும் சொத்துவரியினை செலுத்தலாம்.
பி.பி.பி.எஸ்., வாயிலாகவும் சொத்து வரி செலுத்தும் வசதியும் உள்ளது.