கோவையில் தனியார் பேருந்து ஒன்று 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறது. கோவை கந்தே கவுண்டன் சாவடி முதல் உப்பிலிபாளையம் வழியாக இயக்கப்படும் தனியார் பேருந்து இச்சலுகையினை பொது மக்களுக்கு அளித்து வருகிறது.இது அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டினை பெற்று வருகிறது .
அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. இதனால் மாணவர்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். மேலும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் கூட்டம் அதிக விலை காரணமாக ஏறுவதில்லை. ஆனால் தற்போது இந்த சலுகையால் பல மாணவர்கள் இந்த 5 ரூபாய் பேருந்தினையும் பயன் படுத்தி வருகின்றனர்
பள்ளிகள் அடுத்த வாரம் திறக்க உள்ள நிலையில் கோவை கந்தே கவுண்டன் சாவடி முதல் உப்பிலிபாளையம் வழியாக இயக்கப்படும் தனியார் பேருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பேருந்தில் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்க 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் கூறுகையில், “கந்தே கவுண்டன் சாவடி முதல் உப்பிலிபாளையம் வழித்தடத்தில் ஏராளமான தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பள்ளி நேரத்தில் எங்கள் பேருந்து தான் இயக்கப்படுகிறது. எனவே மாணவர்கள் பயன்பெறும் வகையில் எங்கள் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது” என்றார்.
அரசு போக்குவது நிறுவனம் மட்டும் தான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமா என்ன? எங்களால் முடிந்ததை நாங்களும் செய்கிறோம். என்று களத்தில் இறங்கியுள்ளனர் தனியார் பேருந்து நிர்வாகத்தினரை பொது மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.