Makkah City in Saudi Arabia 
செய்திகள்

ஹஜ் புனித யாத்திரையில் 68 இந்தியர்கள் உயிரிழப்பு… வெளியான தகவலால் மக்கள் பீதி!

பாரதி

இஸ்லாமியர்களின் ஹஜ் புனித யாத்திரையில் சுமார் 68 இந்தியர்கள் உட்பட மொத்தம் 600 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால், சமீபக்காலமாக வறட்சியான பாலைவனப் பகுதிகளிலும் கனமழை பெய்கிறது. மே மாதம் துபாயில் வரலாறு காணாத அளவு மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து சவுதியிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

இப்படியிருந்த சூழ்நிலையில், இந்த மாதம் சவுதியில் வெப்ப அலை கடுமையாக இருந்து வருகிறது. இதற்கு முன்னதாகவே ஐநாவும் உலக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதாவது, உலகில் அடுத்த 20 ஆண்டுகளில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு உயரப் போகிறது என்று கூறியது.

அந்தவகையில், உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான ஹஜ், இஸ்லாமியர்களின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மெக்காவில் உள்ள ஹஜ்ஜிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் பேர், புனித யாத்திரைக்காக மெக்காவிற்கு வருவார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அங்கு தற்போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவின் மெக்காவிற்கு வந்த ஹஜ் பயணிகளில் 19 பேர், உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. வெப்ப அலையின் தாக்கத்தால் இந்த உயிரிழப்புகள் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்படியிருக்க கொட்டித் தீர்த்த மழைக்கும் கடுமையான வெப்ப அலைக்கும் இடையில் உள்நாட்டு மக்களே சிக்கிக்கொண்டிருகின்றனர். அந்தவகையில் வெளிநாடுகளிலிருந்து புனித யாத்திரை செல்லும் மக்களும் அந்த வெப்ப அலையில் சிக்கிக்கொள்கின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு மட்டும் சவுதியில் ஏற்பட்ட வெப்ப அலையில் சிக்கி 68 இந்தியர்கள் உட்பட 645 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 323 பேர் எகிப்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT