சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மெரினாவில் ரூ.1 கோடியே 14 லட்சம் செலவில் மரத்தால் அமைக்கப்பட்ட நாட்டின் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை கடந்த நவம்பர் 27 ஆம் தேதி திறக்கப்பட்டது. தற்போது மாற்று திறனாளிகளுக்காக தமிழக அரசு கட்டிய மரப்பாலம் ஒரே வாரத்தில் தேசமடைந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பலகையிலான பாலம் மற்றும் பாதை கடல் அலையின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் உடைந்து நொறுங்கி உள்ளது. அதுவும் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த இருநாட்களாக அலைகள் ஆர்ப்பரித்து வரும் நிலையில், மரப் பாலமும், மரப் பலகையும் கடுமையாக அளவு சேதமடைந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாற்று திறனாளிகள் கடற்கரையை அருகில் சென்று பார்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருந்த மரப்பாலம் , சுமார் ரூ. 2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மெரினா கடற்கரையில் எழுந்த அலையின் காரணமாக அந்த மரப்பாலம் மிக கடுமையாக தேசம் அடைந்துள்ளது என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது .
தமிழக அரசின் இந்த மரப்பாலம் குறித்த முன்னெடுப்பு பலராலும் வரவேற்கப்பட்ட நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பாலத்தில் அனைவரும் நடந்துச் செல்வது குறித்த விமர்சனங்கள் கூட பலராலும் எழுப்பப்பட்டது.
சேதமடைந்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என மாநகர மேயர் பிரியா தெரிவித்து உள்ளார்.