செய்திகள்

ஜப்பான் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து!

கல்கி டெஸ்க்

ஜப்பான் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு உள்ளது. ஜப்பான் நாட்டின் கோபே நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஓய்வூதியம் பெற்று வருபவர்களும், தினக்கூலி பெறுவோரும் தங்கி இருந்து உள்ளனர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஜப்பான் நாட்டின் கோபே நகரில் 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு தீ அடுத்தடுத்து பரவியுள்ளது. மொத்தம் 30 அறைகள் கொண்ட முதல் தளத்தில், அறைகள் முழுவதும் கரும்புகை பரவியுள்ளது.

இந்த சம்பவத்தில் முதல் தளத்தில் வசித்த 8 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ஓரினச் சேர்க்கை பென்குவின் பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?

கூகிள் மேப்பில் உள்ள இந்த 7 அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா?

அமைதியான சொர்க்கம் சக்ரதா (Chakrata) மலைவாசஸ்தலம்!

நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

மாதுளம் பழத்தை விட அதன் தோல் மிகுந்த ஆற்றல்மிக்கதாமே!

SCROLL FOR NEXT