செய்திகள்

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை!

ஜெ.ராகவன்

2023 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் சமயத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முழு உருவச் சிலை, மும்பை வான்கடே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைக்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வருகிற ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி 50 வயதாகிறது. அவரது ஐம்பதாவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், மும்பை கிரிக்கெட் சங்கம் அவரது முழு உருவச்சிலையை வான்கடே ஸ்டேடியத்தில் திறக்க உள்ளது என்றும் அதை ஸ்டேடியத்தின் நுழைவுப் பகுதியில் வைக்க தீர்மானித்துள்ளோம் என்றும் சங்கத்தின் தலைவர் அமோல்கலே அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒருசில கிரிக்கெட் வீர்ர்களின் சிலைகளே வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சி.கே.நாயுடுவின் முழு உருவச்சிலை இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்திலும், நாக்பூரிலுள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்திலும் மற்றும் ஆந்திரத்தில் விடிசிஏ. ஸ்டேடியத்திலும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்று சிலைகளும் வெவ்வேறானவை என்றார்.

“இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. 1998 ஆம் ஆண்டில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில்தான் எனது கிரிக்கெட் பயணம் தொடங்கியது. நான் முதல் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியதும் இங்குதான். நான் கடைசியாக கிரிக்கெட் ஆடியதும் இங்குதான். எனது வாழ்க்கைச் சக்கரம் சூழல ஆரம்பித்து முடிவடைந்ததும் இங்குதான். இந்த ஸ்டேடியம் எனக்கு பல நினைவுகளை ஏற்படுத்துகிறது. சில மறக்கமுடியாதவை. ஆனால், சிலவற்றில் நான் சோபிக்கவில்லை. ஆனாலும், இது எனக்கு நல்ல தருணம்தான்” என்று டெண்டுல்கர் கூறியுள்ளார்.

வான்கடே ஸ்டேடியம் என் மனதில் நீங்காத இடம்பெற்றுள்ளது. 25 ஆண்டுகள் அனுபவத்துடன் நான் 25 வயது இளைஞனாகவே உணர்கிறேன். ஒரு நல்லெண்ணத்துடன் எனக்கு சிலை வைக்க முடிவு செய்திருக்கும் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு எனது நன்றி. கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை இங்குதான் நான் செலவிட்டிருக்கிறேன். எனக்கு சிலை வைக்கப்போவதாக கூறியவுடன் அதை எப்படி எங்கு வைக்கப்போகிறீர்கள் என்று ஆர்முடன் கேட்டுத் தெரிந்துகொண்டேன் என்றும் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இந்தஆண்டுக்கான உலக கோப்பை போட்டி நடைபெறும் சமயத்தில் டெண்டுல்கர் சிலை திறக்கப்படும். இந்நிகழ்ச்சியல் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இது ஒரு மிகப்பெரிய நிகழ்வாக அமையும் என்றார்.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT