துணை நிலை ஆளுநர் வினய் குமார்
துணை நிலை ஆளுநர் வினய் குமார் 
செய்திகள்

ஆம் ஆத்மி vs துணை நிலை ஆளுநர் தில்லியில் மோதல்!

ஜெ.ராகவன்

அரசியல் விளம்பரங்களை அரசு விளம்பரங்கள் போல் வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ரூ.97 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலர் நரேஷ்குமாருக்கு உத்தரவிட்டுள்ளார் துணை நிலை ஆளுநர் வினய் குமார். தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையின் பேரிலேயே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசுக்கும், தில்லியை ஆளும் ஆம் ஆம்தி கட்சிக்கும் இப்போது இதுதான் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

தில்லி துணைநிலை ஆளுநருக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீதான கலால் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடித்து வருகிறது. இது தவிர அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டு அது தொடர்பான விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்த வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைக்கும் பிரசாரத்தை கெஜ்ரிவால் அரசு தொடங்கியது. இது தொடர்பாகவும் துணைநிலை ஆளுநருக்கும் கெஜ்ரிவால் அரசுக்கும் மோதல் இருந்து வருகிறது.

இதனிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம் செயல்படுவதை தடுக்கும் நோக்கில் அதிகாரிகளை வைத்து ஆட்சி நடத்துவதாக துணை நிலை ஆளுநர் மீது ஆம் ஆத்மி அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. தலைநகர் தில்லியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை சீர்குலைக்கும் வகையிலும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும் துணைநிலை ஆளுநர் செயல்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கூறியிருந்தது.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT