ஆம் ஆத்மி டெல்லி சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவர் கடந்த 5-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார்கள் . அவர்கள் ‘‘இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை. இனி அவர்களை வழிபட மாட்டேன்’’ என்று உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.
அதனால் கடும்கோபமடைந்த பாஜக கட்சி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமை கடுமையாக விமர்சித்தது. மேலும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்தநிலையில் அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை அவரே ராஜினாமா செய்து விட்டார்.
இது குறித்து ராஜினாமா செய்யச்சொல்லி என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் என்னுடைய சொந்த விருப்பத்திலேயே பதவி விலகியுள்ளேன். அந்த கூட்டம் பற்றி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தெரியாது" என்றும் ராஜினாமா குறித்து அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தெரிவித்துள்ளது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.