கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் பண்டிகைகள் நெருங்கி வரும் இவ்வேளையில் ஆவின் நெய் விலை உயர்வு பொது மக்களிடையே கடும் அதிர்ச்ச்சியினை உண்டு பண்ணியுள்ளது.
ஆவின் பாலின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கணிசமாக உயர்த்தப்பட்டது. இது குறித்து அப்போதே வாடிக்கையாளர்கள் முணுமுணுக்க தொடங்கினர். எதிர்க்கட்சிகளும் ஆவின் நிறுவனம் மேல் பல்வேறு அதிருப்தி குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஆரஞ்சு நிற பால் பாக்கெட்கள் மட்டும் ரூபாய் 12/- உயர்த்தப் பட்டது குறித்து பல்வேறு கேள்வியும் எழுந்தது.
தற்போது ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வந்த நிலையில் கடந்த 9 மாதங்களில் ஆவின் நெய் விலை 3வது முறையாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய் விலையை 50ரூபாய் அதிகரித்து ஆவின் உத்தரவிட்டுள்ளது. புதிய விலையில் ஆவின் நெய், இன்று முதலே விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக, நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது கண்டு வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆவின் பொருட்களின் விலையானது தற்போதெல்லாம் அடிக்கடி உயர்ந்து வருகிறது. ஏற்கனவே ஐஸ் கிரீம், தயிர், நெய், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் உள்ளிட்டவைகளின் விலை அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில் பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை 580.00ரூபாயில் இருந்து 630.00ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பால் விலையை தொடர்ந்து, நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது . ஆவினில், 5 லிட்டர் நெய் பாட்டில் பாட்டில், 2,900 ரூபாயில் இருந்து 3,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் நெய் ரூ.580 ரூபாயில் இருந்து, ரூ. 630 ஆக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து ரூ. 315 ஆக உயர்ந்துள்ளது என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 200 மி.லி 130 ரூபாயில் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.