தலைநகர் புது டெல்லியில் பட்டாசு வெடித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கோபால்ராய் தெரிவித்துள்ளது மிகுந்த பரபரப்பை கிளப்பியுள்ளது. புது டெல்லியில் மாசு அதிகரிப்பதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பட்டாசு வெடிப்பதில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. டெல்லி மாசுகட்டுப்பாடு வாரியமும் காற்றில் மாசினை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன்படி அமைச்சர் "டெல்லியில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 200 அபராதம்" என்று அறிவித்துள்ளார். பட்டாசு சேமித்தல், விற்பனை செய்தல் மற்றும் தயாரித்தல் ஆகியவற்றிற்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கூடவே 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று டெல்லி அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார்.
இதனால் தீபாவளி என்றாலே பட்டாசு தானே! பட்டாசு வெடிக்காமல் தீபாவளியா? என பொதுமக்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.