செய்திகள்

VijayAntony மகள் மரணம்: தற்கொலை செய்துக் கொள்ளவேண்டும் என்ற அந்த SPARK MOMENT-ஐ கடந்துச் செல்வது எப்படி?

எல்.ரேணுகாதேவி

சையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் திரையுலகினர் மட்டுமல்லாது பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதுதான் ஆன்மீகமும் அறிவியலும் செல்லுகின்றன. ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை நடந்துவிடுகிறது. இந்நிலையில் உலக தற்கொலை தடுப்பு நாளையொட்டி கல்கி ஆன்லைன் சார்பாக பிரபல மனோதத்துவ நிபுணரும்  சிநேஹா தற்கொலை தடுப்பு நிறுவனருமான டாக்டர். லக்ஷ்மி விஜயகுமாரிடம் ஒரு சிறப்பு பேட்டியை கல்கி ஆன்லைனில் வெளியிட்டிருந்தோம்.

அதில் மனஅழுத்தம் மற்றும் தற்கொலை தடுப்பு வழிமுறைகளை குறித்து டாக்டர் லட்சுமி விஜயகுமார் பதில் அளித்திருந்தார். குறிப்பாக தற்கொலை செய்துக்கொள்ளவேண்டும் என்ற அந்த SPARK MOMENT-ஐ கடந்துச் செல்வது எப்படி? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், தற்போதையை சூழ்நிலையில் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறோம். அதன் அடிப்படையில் பிரபல மனோதத்துவ நிபுணரும்  சிநேஹா தற்கொலை தடுப்பு நிறுவனருமான டாக்டர். லக்ஷ்மி விஜயகுமார் அளித்த பதில் உங்களின் பார்வைக்கு...

Dr. Lakshmi Vijayakumar

வசதிப்படைத்தவர்களும், வறுமை நிலையில் உள்ளவர்களும் தற்கொலைச் செய்துகொள்வதை பார்க்க முடிகிறதே? அந்த ஸ்பார்க் MOMENTஐ கடந்து செல்வது எப்படி?

மனோதத்துவவியல் துறையில் தற்கொலை என்பதை ஒரு Democratic Action என சொல்வோம். ஏனென்றால், தற்கொலை என்ற எண்ணம் ஒருவர் பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு பார்க்காது. சமூகத்தின் எல்லா மட்டத்திலும் உள்ளது. தற்கொலை என்பது ஒரு ஸ்ட்ராங் உணர்வு.  நீண்ட காலமாக ஒருவர் தற்கொலை என்ற எண்ணத்தில் உழன்றுக்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் அந்த நீண்டகால எண்ணத்திற்கு அவரது உடல் ஒத்துழைக்காது.

பொதுவாக Acute தற்கொலை எண்ணம் என்பது ஒருவார காலத்தில் இருந்து இரண்டுவார காலம். அந்த
2,3 வாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இதை Tunnel Vision என்போம். அந்த Tunnel Visionல் இருப்பவர்களுக்கு உயிரோடு இருக்ககூடாது.. என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கும். இதனால் வேறு எதிலும் ஒரு பிடிப்பு இருக்காது. உணர்ச்சிகள் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும்.

இது போன்ற சூழ்நிலையில், ஒன்று தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளிவந்துவிடலாம். அல்லது தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளிவருவதற்கான மனநல சிகிச்சை முயற்சிக்கு சென்றுவிடலாம். தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு மேலோங்கியுள்ள உணர்ச்சிகளை தங்களுடைய எண்ணத்தை புரிந்துக்கொள்கிறவர்களிடம் மனம்விட்டு பேசிவிடலாம். எந்தவிதமான பிரச்னையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவரின் மனநிலை என்பது மூன்று விதமாகப் பார்க்கலாம்.

முதலாவது Loneliness குடும்பம், நண்பர்கள் என அனைவரும் இருந்தாலும் தனியாக இருப்பதுபோன்ற உணர்வு மேலோங்கி இருக்கும்.

இரண்டாவது Helplessness என்னால் எதுவும் செய்யமுடியாது என்ற மனப்பான்மை.

மூன்றாவது Hopelessness அதாவது எதுவுமே நன்றாக நடக்காது என்ற எண்ணம்.

எந்தவித பிரச்னையாக இருந்தாலும், கடைசியாக தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை இந்த மூன்றும்தான் மேலோங்கச் செய்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க நாங்கள் இருக்கிறோம்.

சிநேஹா தற்கொலை தடுப்பு மையத்தில் நாங்கள் எப்போதும் சொல்வது என்னவென்றால் ‘தற்கொலை என்பது தற்காலிக பிரச்சனைக்காக எடுக்கப்படும் நிரந்திர முடிவு.’ (Permanent Solution for a Temporary Problem) அந்தச் சமயத்தில் நாம் வெளியே வந்துவிட்டோம் என்றால், பெரும்பாலான தற்கொலைகள் ஏற்படாமல் போகும்.

முதலில் நம்முடைய பிரச்சனையை மற்றவர்களிடம் பேச முயற்சிக்கவேண்டும். ஒருவேளை உங்களுக்கு யாரும் இல்லையென்றால், சிநேஹா போன்ற அமைப்புகளை தொடர்புகொள்ளலாம் (+91 44 2464 0050  +91 44 2464 0060 ). அதற்கு தானே நாங்கள் இருக்கிறோம்.

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

ஸ்கிசோஃப்ரினியா காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

SCROLL FOR NEXT