செய்திகள்

நடுவானில் குலுங்கிய ஏர் இந்திய விமானம் பயணிகள் அலறல்!

கல்கி டெஸ்க்

டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதால் பயணிகள் பீதி அடைந்தனர். விமானம் திடீரென நடுவானில் குலுங்கியதில் 7 பயணிகள் காயம் அடைந்தனர்.

சமீபத்தில் ஏர் இந்தியா விமான சேவைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருவது வாடிக்கையாகி விட்டது. நேற்று

ஏர் இந்தியாவின் ஏஐ 302 விமானம், டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்து. இந்த நிலையில் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென விமானம் குலுங்கியது. இதனால் 7 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதில் மூன்று பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக விமானத்தில் பயணித்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் முதலுதவி அளிக்கப்பட்டது. இதன்பின் விமானம், சிட்னி விமான நிலையத்தை சென்றடைந்ததும் ஏர் இந்தியா விமானத்தின் மேலாளர், பயணிகளுக்கு மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளை செய்து தந்து உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு எந்த பயணிக்கும் பெரிய காயம் இல்லை என விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இதில் 3 பயணிகளே மருத்துவ உதவி பெற்றனர் என்றும் யாரும் மருத்துவமனையில் சேர வேண்டிய தேவை ஏற்படவில்லை என்றும் விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்து உள்ளது. எனினும், இந்த சம்பவம் பற்றி ஏர் இந்தியா விமானம் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த மாதத் தொடக்கத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், நடுவானில் பயணி ஒருவரை தேள் கொட்டியது. வலியால் துடித்த அவருக்கு விமானம் தரையிறங்கிய பின் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்ற 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் பாம்பு இருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து விமான பயணிகள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT