சண்டிகரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக அதிகாலையில் எழுப்பும் வகையில் அங்குள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களில் அதிகாலையில், ‘அலாரம்’ ஒலிக்குமாறு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. .
ஹரியானா மாநிலத்தில் வருகிற மார்ச் மாதம் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடக்கவுள்ளன.
இத்தேர்வுகளுக்குத் தாயாராகும் வகையில் மாணவர்கள் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து படிக்கும் வகையில், தங்கள் குழந்தைகளை எழுப்பும் வகையில், திட்டம் வகுக்க வலியுறுத்தி, அனைத்து அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அம்மாநில கல்வித் துறை கடிதம் அனுப்பியது.
மேலும் மாணவர்கள் விழித்திருந்து படிக்கிறார்களா என்பதை வாட்ஸ்அப் குரூப் மூலம் ஆசிரியர்கள் விசாரிப்பார்கள் என்று பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, மாணவர்களை அதிகாலையில் எழுப்பும் வகையில் கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களில் அலாரம் ஒலி எழுப்பி அறிவிப்புகளை வெளியிடுமாறு ஹரியானா அரசு அறிவித்துள்ளது.