Anand Ambani gifted a watch worth 2 crores to the guest! 
செய்திகள்

விருந்தினருக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த 2 கோடி மதிப்பிலான வாட்ச்! 

கிரி கணபதி

ஆனந்த் அம்பானி, தனது திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு 2 கோடி மதிப்பிலான கைக்கடிகாரத்தை பரிசாகக் கொடுத்துள்ளார். இதனால், Audemars Piguet என்ற பிராண்டை சேர்ந்த இந்த ஆடம்பர கைக்கடிகாரங்கள் இப்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. இந்தப் பதிவில் Audemars Piguet கை கடிகாரங்கள் பற்றிய சில சுவாரசிய தகவல்களைப் பார்க்கலாம். 

வரலாறு: Jules Audemars மற்றும் Edward Piguet ஆகியோர், Le Brassus, Switzerland-ல் தங்கள் சொந்த கைக்கடிகார தயாரிப்பு நிறுவனங்களைத் தொடங்குவதற்கு முன், பல கைக்கடிகார நிறுவனங்களுக்கு வேலை செய்தனர். அதன் பின்னர்தான் 1875-இல் Audemars Piguet என்ற நிறுவனத்தை நிறுவினர்.

Audemars Piguet பல பிரபலமான கைக்கடிகார மாதிரிகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் மிகவும் பிரபலமானவை என்று பார்க்கும்போது: 

Audemars Piguet
  • Royal Oak: 1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் ஓக் மாடல், அதன் எட்டு கோண வடிவமைப்புக்கு மிகவும் பெயர் பெற்றது. இது Audemars Piguet-ன் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாகும். இதுதான் தற்போது அம்பானி திருமணத்தில் கொடுக்கப்பட்ட கைகடிகாரம். 

  • Royal Oak Offshore: Royal Oak மாடல் கடிகாரத்தின் முற்றிலும் வித்தியாசமான பதிப்பு இதுவாகும். இதன் டயல் பார்ப்பதற்கு பெரிய அளவிலும், தடிமனாகவும் இருக்கும். இதற்காகவே இதை பலர் விரும்பி வாங்குகின்றனர். 

  • Millennium: இது முற்றிலும் ஒரு வித்தியாசமான கைக்கடிகார மாடலாகும். பார்ப்பதற்கு சாதாரண கைகாடிகாரம் போல் இருந்தாலும், Perpetual Calendar மற்றும் Chronograph போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளது. 

  • Jules Audemars: இது Audemars Piguet நிறுவனத்தின் ஒரு கிளாசிக் கை கடிகாரம் மாடல். இதன் பாரம்பரிய வடிவமைப்பு மற்றும் நுட்பமான இயக்கம் போன்றவை காண்போரை அப்படியே கவர்ந்திழுக்கும். 

Audemars Piguet நிறுவன கைக்கடிகாரங்கள் அவற்றின் தனித்துவமான இயக்க முறைக்கு பெயர் பெற்றவை. நிறுவனம் தனக்கான சொந்த வாட்ச் இயங்கும் மெக்கானிசத்தை வடிவமைத்து தயாரிக்கிறது. இது துல்லியம் மற்றும் செயல் திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. மற்ற கைக்கடிகாரங்களில் நீங்கள் காண முடியாத பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 

இதனாலேயே, Audemars Piguet கை கடிகாரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. சாதாரண அடிப்படை மாடல்களே ஆயிரக்கணக்கான டாலர்கள் விலை கொண்டவை. மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மாடல்கள் இலட்சக்கணக்கான டாலர்கள் விலை கொண்டவை. இந்த தனித்துவமான கை கடிகாரங்களைதான் அம்பானி தன் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பரிசளித்துள்ளார். 

பிரபலங்கள் அனைவரும் இந்த வாட்ச்சை அணிந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. 

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT