Anant Ambani wedding 
செய்திகள்

ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வரும் VVIPக்கள் பட்டியல் வெளியீடு!

கண்மணி தங்கராஜ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்த விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை குஜராத்தில் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய விழாக்களும். அடுத்ததாக இவர்களின் திருமணமானது பல உலகளாவிய விருந்தினர்கள் சூழ, வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி மும்பையிலும் கோலகாலமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் "Threads of Love and Heritage: A Tapestry Woven for Anant and Radhika" என்ற தலைப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இதில் இந்திய பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, அம்பானி குடும்பம் கட்ச் மற்றும் லால்பூரைச் சேர்ந்த திறமையான பெண் கைவினைக் கலைஞர்களைக் கொண்டு அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கான திரைச்சீலையை நெசவு செய்ய நியமித்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Anant Ambani wedding

திருமண விருந்தினர்கள் பட்டியல்:

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவில் ஏராளமான உலகளாவிய விருந்தினர்கள் நிச்சயமாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரபலத் தொழிலதிபர்களும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபல பாலிவுட் பிரபலங்களும் அடங்குவர். திருமண விருந்தினர்கள் பட்டியலில் இடம் பெரும் சில பிரபலங்கள்...

  • மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மோர்கன்

  • டெட் பிக் தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்டான்லி

  • மைக்ரோசாப்ட்டின் நிறுவனர், பில் கேட்ஸ்.

  • தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான, பாப் இகர்

  • பிரபல அமெரிக்கத் தொழிலதிபர், லாரி ஃபிங்க்

  • அட்னாக் தலைமை நிர்வாக அதிகாரி, சுல்தான் அகமது அல் ஜாபர்,

  • பிரபல அமெரிக்க பிரிட்டிஷ் தொழிலதிபரான ‘லின் ஃபாரஸ்டர் டி ரோத்ஸ்சைல்ட்’

  • பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைவர் பிரையன் தாமஸ் மோய்னிஹான்

  • பிளாக்ஸ்டோன் தலைவர், ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன்

  • கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான்

  • அடோப் தலைமை நிர்வாக அதிகாரி, சாந்தனு நாராயண்

  • லூபா சிஸ்டம்ஸ்சின் தலைமை நிர்வாக அதிகாரி, ஜேம்ஸ் முர்டோக்

  • ஹில்ஹவுஸ் கேபிடல் நிறுவனர் ஜாங் லீ

  • BP தலைமை நிர்வாகியான முர்ரே ஆச்சின்க்ளோஸ்

  • எக்ஸோர் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் எல்கன்

  • புரூக்ஃபீல்ட் சொத்து மேலாண்மை தலைமை நிர்வாக அதிகாரி புரூஸ் பிளாட்

இன்னும் இந்த பட்டியல் நீளுமா? என்பது குறித்த தகவல்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

சமைக்காமலே சாதமாகும் 'மேஜிக் அரிசி!' இதோடா!

அடுத்தடுத்து பகீர்… முடக்கப்படும் கணினிகள்… எச்சரிக்கும் காவல்துறை!

கார் கண்டுபிடித்த கார்ல் பென்ஸ்!

ஐபிஎல் 2025: விற்கப்படாத அந்த முக்கிய வீரர்கள்… யார் யார்?

பங்குச்சந்தையில் மாதம் 100 ரூபாய் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்குமா? 

SCROLL FOR NEXT