செய்திகள்

‘கள்ளச்சாராய மரணங்களுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து போராட்டம்‘ அண்ணாமலை அறிவிப்பு!

கல்கி டெஸ்க்

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் வரை பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத் தொடர்ந்து கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் போலீசார் முடுக்கி விடப்பட்டு தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து சில மாவட்டங்களில் இது தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் வரும் 20ம் தேதி கண்டனப் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து இருக்கிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய, திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பாஜக வரும் 20ம் தேதி மாபெரும் கண்டனப் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். இந்தக் கண்டனப் போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்து இருக்கிறார்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT