செய்திகள்

தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் நிலவில் மோதிய ஜப்பான் விண்கலம்.

கிரி கணபதி

நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம் என்ற சாதனையைப் படைக்க கடுமையாக உழைத்து, கிட்டத்தட்ட நிலவில் தரையிறங்கும் சமயத்தில் எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது. 

ஜப்பானைச் சேர்ந்த iSpace நிறுவனத்தின் விண்கலத்திற்கு, நேற்று சந்திரகிரகத்தில் நடந்த சோகத்தைப் பார்க்கும்போது, கடந்த 2019ஆம் ஆண்டு இஸ்ரோவின் விண்கலம் நிலவில் மோதியதை அப்படியே நினைவூட்டுகிறது. Hakuto-RM1 என்ற மூன்லாண்டர் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் ரஷித் என்ற ரோவருடன் நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்ட ஜப்பானின் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் முயற்சி, கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்தது. 

நிலவில் தரையிறங்கிய 25 நிமிடங்களுக்கு பிறகு கூட, ஐஸ்பேஸ் நிறுவனத்தால் அவர்கள் அனுப்பிய முன்லாண்டருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் அனுப்பிய லாண்டர் மற்றும் ரோவர் நிலவில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என ஐஸ்பேஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தோல்வியானது, இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலத்திற்கு நடந்ததை உங்களுக்கு ஞாபகப்படுத்தினால் அதில் ஆச்சரியம் எதுவுமில்லை. சந்திராயன் 2 விண்கலமும் நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

நிலவில் தரையிறங்குவது ஏன் கடினமாக இருக்கிறது?

பூமியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ஜிபிஎஸ் மற்றும் நேவிகேஷனைப் பயன்படுத்தி எளிமையாக செல்லலாம். ஆனால் இதுவே சந்திர கிரகணம் என்று வரும்போது அது அவ்வளவு எளிதான விஷயமில்லை. ஒரு விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்குள், 6000 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து பூஜ்ஜியத்திற்கு வரவேண்டும். ஆனால் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் லாண்டர் இதை செய்ய தவறிவிட்டது. இது தோல்வியடைய மற்றொரு காரணம், ஒரு விண்கலம் நினைவின் அருகே செல்லும்போது, அது டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் வழியாகவே பூமியோடு தொடர்பு கொள்ளப்படுகிறது. இந்த தொடர்பில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், விண்கலம் தனது பார்வையை இழந்ததற்கு சமமாகும். மேலும் நிலவின் மேற்பரப்பு கரடுமுரடான விளிம்புகள் மற்றும் பள்ளத்தைக் கொண்டிருப்பதால் சரியான முறையில் தரையிறங்க முடியாமல் தோல்வியடைகிறது. 

சந்திராயன்-3 வெற்றி பெறுமா? 

ற்போது சந்திராயன் 3 வெண்கலம் தனது இறுதிகட்ட ஆயத்தப் பணிகளில் இருந்து வருகிறது. இது 2023 ஜூன் மாதத்தில் விண்ணில் ஏவப்படலாம் என்று சொல்லப் படுகிறது. இதைப் பற்றி இஸ்ரோவின் தரப்பிலிருந்து என்ன கூறுகிறார்கள் என்றால், "இந்த விண்கலமானது சந்திரனில் சுமுகமாக தரையிறங்க அனைத்து திட்டத்தையும் நாங்கள் வகுத்துள்ளோம். நாங்கள் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடு என்று பெருமையை இம்முறை இந்தியாவுக்கு கிடைக்கும்" என தெரிவித்துள்ளனர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT