போக்குவரத்து விதிமீறல் 
செய்திகள்

வாகன ஓட்டிகளே விதிமீறல் செய்கிறீர்களா? இதை படிங்க...!

கல்கி டெஸ்க்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 11 சந்திப்புகளில் 15 ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து என்ஐசி E- Challan போர்ட்டல் உதவியுடன் தானியங்கி E-Chalian முறையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து தானியங்கி E-Chalian முறையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

Traffic

மொத்தம் 11 சந்திப்புகளில் 15 ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறித்தும், போக்குவரத்து விதிமீறல்களை கடைப்பிடிப்பதன் மூலம் போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், திருத்தி அமைக்கப்பட்ட அபராத தொகையை கருத்தில் கொண்டு வாகனத்தை ஓட்டவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நடைமுறை ஏப்ரல் 1, 2022 இல் தொடங்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்த நவீன வகை கேமராக்கள் இரண்டு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் பயணிப்பது. இரண்டு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்வது, மூன்று நபர்கள் பயணம் செல்வது, மற்றும் சாலையில் தவறான பக்கத்தில் வாகனத்தை ஓட்டுவது போன்ற விதிமீறல்களை பதிவு செய்கிறது.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள், கேமராவில் பலமுறை படம் பிடிக்கப்பட்டால், அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இனி வரும் காலங்களில் வாரம் தோறும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என போக்கு வரத்து துறை தெரிவித்துள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT