செய்திகள்

உரிமை கோராத 260 இரு சக்கர வாகனங்கள் ஏலம்: சென்னை காவல்துறை அறிவிப்பு!

கல்கி டெஸ்க்

சென்னை மாநகரில் உரிமை கோரப்படாது நெடுநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 260 இருசக்கர வாகனங்களை ஏலம் விட இருப்பதாக காவல்துறை அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சென்னை, பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 260 இருசக்கர வாகனங்கள் சென்னை, புதுப்பேட்டை பெருநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் 28.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

பகிரங்க ஏலத்திற்கான முன்பதிவு 14.06.2023 மற்றும் 15.06.2023 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. அடையாள அட்டை மற்றும் GST பதிவெண் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.

28.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத் தொகை மற்றும் GST தொகையினை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT