Streptococcal Toxic Syndrome 
செய்திகள்

மனிதர்களின் தசையை உண்ணும் பாக்டீரியா… 48 மணி நேரத்தில் மரணம்… ஜப்பானில் நடப்பது என்ன? 

கிரி கணபதி

மனிதர்களின் தசையைத் தின்று 48 மணி நேரத்தில் உயிரைக் கொல்லும் புதிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்திய நிலையில் தற்போது இந்த ஜப்பான் பாக்டீரியா பொதுமக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. Streptococcal Toxic Syndrome என அழைக்கப்படும் இந்த புதிய நோய், மனிதர்களைத் தாக்கியதும் அவர்களின் தசைகளை திண்ணத் தொடங்கி, பாதிக்கப்பட்ட நபர்களின் உயிரை பறித்துவிடும் என சொல்லப்படுகிறது. 

காய்ச்சல், கடும் உடற்சோர்வு, மூட்டு வலி, தொண்டை வலி, மூச்சுத்திணறல், வீக்கம் போன்றவை இதன் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்றும், பின்னர் திசு மற்றும் உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு மரணம் நிகழும் என்றும் டோக்கியோ மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 50 வயதை கடந்தவர்களுக்கு இந்த பாக்டீரியா பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர். இந்த பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்தில், பாதிக்கப்பட்ட நோயாளி உயிரிழப்பார் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

2022-லேயே பல ஐரோப்பிய நாடுகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு இந்த வைரஸ் நோயின் தாக்கம் குறித்து அறிவித்தன. பின்னர் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு இந்த வைரஸின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி ஜப்பானில் 977 பேர் இந்த அரியவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த ஆண்டு இறுதிக்குள் இது 2500 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஜப்பானில் கொரோனா காலத்தில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் போன்று இது மிகவும் வேகமாக பரவாது என்றாலும் இந்த புதிய பாக்டீரியா உலக நாடுகளிடையே மீண்டும் பீதியைக் கிளப்பியுள்ளது.  

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT