rameswaram cafe blast 
செய்திகள்

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு.. CCTV-யில் சிக்கிய நபர்!

பாரதி

நேற்று மதியம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு நடந்து கர்நாடகாவையே உலுக்கியுள்ளது. போலீஸார் விசாரணையின்போது சிசிடிவி காட்சியில் ஒரு நபர் கூலாக நடந்துச் சென்றுள்ளார். இதனையடுத்து போலீஸார் அந்த நபர் மேல் சந்தேகப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகம் வழக்கம்போல் நேற்று செயல்பட்டது. அப்போது மதிய நேரத்தில் திடீரென்று உணவகத்தின் உள்ள ஒரு பொருள் வெடித்துச் சிதறியது. இதனால் ஹோட்டல் முழுவதும் புகை மண்டலங்களால் நிரம்பியது. ஹோட்டலில் கண்ணாடிகள் நொறுங்கின. அதேபோல் தரையில் அமைத்திருந்த  கிரானட் கற்களும் உடைந்து சிதறின.

உணவகத்தின் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தனர். ஊழியர்கள் உட்பட மொத்தம் 9 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து கர்நாடகா போலீஸார் இந்த குண்டு வெடிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டல் மற்றும் சுற்றுவட்டாரச் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களைப் போலீஸார் சோதனை செய்துப்பார்த்தனர். அதில் உணவகத்திற்கு வந்த ஒரு நபர் இட்லி ஆர்டர் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து வாங்கமால் திரும்பிய காட்சி சிசிடிவியில் தெரியவந்தது. அதேபோல் உணவருந்திவிட்டு கைக்கழுவும் இடத்தில்தான் அந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

பேருந்தில் இறங்கிய நபர் ஒருவர் கையில் பையோடு இறங்கி ஹோட்டலுக்குச் சென்றுத் திரும்பி வரும்போது கையில் பை இல்லாமல் திரும்பியிருக்கிறார். தொப்பி அணிந்து உணவகத்திற்கு வந்த அந்த நபர் மீதுதான் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

மங்களூர் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே பொருட்கள் தான் இந்த குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆகையால் மங்களூர் குண்டு வெடிப்பில் சம்பதப்பட்ட ஷாரிக் குழுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸார் பல இடங்களில் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT