தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு அண்மையில் அமலுக்கு வந்தது. ஆவின் நிறுவனத்தின் பிரீமியம் அல்லது ஆரஞ்சு பாக்கெட் பால், ஒரு லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது..
அதேசமயம் பாஜக ஆளுங்கட்சியான கர்நாடகாவில் பால் விலை உயர்த்தப் பட்டதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘’பால் விலை உயர்வை நிறுத்தி வைக்கும்படி பால் கூட்டமைப்பினரிடம் கேட்டுள்ளோம்.
இது தொடர்பாக 20-ந் தேதிக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும்’’ என தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கர்நாடகா பால் கூட்டமைப்பினர் விலை உயர்வை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று பாஜகவினர் பால் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளது பெரும் பரபரப்பையும் விமரிசங்களையும் ஏற்படுத்தியுள்ளது.