பிரிஜ் பூஷன்  
செய்திகள்

மல்யுத்த வீராங்கனைகளை பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.. நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் பதில்!

கல்கி டெஸ்க்

கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார் என நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உட்பட பலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லி போராட்டம் மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது.

மல்யுத்த வீராங்கனைகளின் கடும் போராட்டம் மற்றும் நாடு முழுவதும் பிரிஜ் பூஷனுக்கு எதிரான எழுந்த எதிர்ப்பு அலை மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல் துறையினர் 2 எப்ஜஆர் பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஜூலையில் பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் வழங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புகார் தெரிவித்தவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்டக் கூடாது என மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை தற்போது டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, டெல்லி போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டஅறிக்கையில்,”தஜிகிஸ்தானில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது நடைபெற்ற சம்பவத்தை டெல்லி போலீஸார், "வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷண் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றுள்ளார்.

தஜிகிஸ்தான் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் போது நடந்த நிகழ்ச்சியில், பிரிஜ் பூஷன் ஒரு வீராங்கனையை அறைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்துள்ளார். வீராங்கனை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தந்தையைப் போல நடந்துகொண்டதாக அவரிடம் பிரிஜ் பூஷன் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அங்கு நடந்த வேறு நிகழ்ச்சியின்போது, பிரிஜ் பூஷன் மற்றொரு மல்யுத்த வீராங்கனையிடம் அனுமதியின்றி அவர் அணிந்திருந்த மேலாடையை விலக்கி, தகாத முறையில் நடந்துள்ளார்" என்றும் தெரிவித்தனர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT