அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி 
செய்திகள்

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறையினரின் சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

கல்கி டெஸ்க்

தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 10 நாட்களுக்குப் பிறகு கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று (ஜூன் 13ம் தேதி) 5 கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட அமாலக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய பாதுகாப்புப் படை பெண் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது. அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது." "தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன." என்று கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

Kitchen Queen's tips: சமையலில் ராணியாக சில சமையல் குறிப்புகள்!

பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT