செய்திகள்

பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக நலமுடன் இருக்கிறார்! குடும்பத்தினர் அறிக்கை!

கல்கி டெஸ்க்

வெளிநாடுகளில் அதிகம் நிகழ்ச்சிகளுக்கு செல்பவர் பாம்பே ஜெயஸ்ரீ. அந்த வகையில் லண்டன் இசை நிகழ்ச்சிக்காக சென்ற அவர் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்ததாகவும், அதில் அவரின் தலை பகுதியில் பலத்த அடிபட்டு சுயநினைவை இழந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ-க்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், கோமா நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மெட்ராஸ் மியூசிக் அகாடமி விளக்கமளித்துள்ளது.

மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா என்ற பாடலை பாடியதன் மூலம் மிகவும் பிரபலமான பாம்பே ஜெயஸ்ரீ. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முத்திரை பதித்துள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ பல்வேறு இசைக் கச்சேரிகளில் பங்கேற்று பாடி வருகிறார்.

அந்த வகையில், இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெறும் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக பாம்பே ஜெயஸ்ரீ சென்றுள்ளார். ஓட்டலில் தங்கி இருந்த அவர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் சார்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இசை நிகழ்ச்சிக்காக இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் போது பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், உங்களின் ஆதரவை பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பம் கோருகிறது. சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை புறக்கணிக்க அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

(ஒரே பெயர் கொண்ட) இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களின் இரட்டை சதங்கள்!

“இந்தியா எங்களின் பரம எதிரி” – பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் பேச்சால் சர்ச்சை!

அவமானமும் ஒரு மூலதனம்தான்!

ஆதரவற்ற சிறுவர்களை முன்னேற்றும் முயற்சி! ரோகன் போபண்ணாவின் உயரிய நோக்கம்!

சூரிய ஒளி எனும் மருந்தின் மகத்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT