செய்திகள்

ஒகேனக்கல் மலைப்பாதையில் பேருந்து விபத்து: பலர் படுகாயம்!

கல்கி டெஸ்க்

ருமபுரி மாவட்டம், பாலக்கோடு தீர்த்தகிரி நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவர் சமீபத்தில் இறந்து விட்டார். அதனை அடுத்து, அவருக்குச் செய்ய வேண்டிய சடங்குக் காரியங்களுக்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரைக்கு அவரது உறவினர்கள் இன்று சென்று கொண்டு இருந்தனர். உயிரிழந்த அரவிந்தனின் குடும்பத்தினர் மொத்தம் 67 பேர் இதற்காக ஒரே பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அந்தப் பேருந்து பென்னாகரத்தைக் கடந்து ஒகேனக்கல் மலைப் பாதையில் சென்று கொண்டு இருந்தது. வழியில் ஆஞ்சனேயர் கோயிலைக் கடந்து பேருந்து சென்று கொண்டிருந்தபோது சாலை வளைவு ஒன்றில் திரும்பிய பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலேயே கவிழ்ந்தது. இந்தப் பேருந்தில் பயணம் செய்த அரவிந்தனின் உறவினர்கள் ஐம்பது பேருக்கும் மேல் படுகாயம் அடைந்தனர். ஆனால், நல்லவேளையாக உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்ட ஒகேனக்கல் போலீசார் மற்றும் பொதுமக்கள் அவர்களை பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தப் பேருந்து விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து ஒகேனக்கல் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT